2026 மே 04, திங்கட்கிழமை

உயர் வெகுமதிகளை வழங்கிய மஹாபொல லொட்டோ

A.P.Mathan   / 2015 மே 27 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

லொத்தர் சீட்டிழுப்பில் புத்தாக்கங்களை படைத்து வரும் மஹாபொல லொட்டோ, தனது முதலாவது விற்பனையாளர் மாநாட்டின் போது, நாட்டின் சகல பகுதிகளையும் சேர்ந்த சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த விற்பனை பிரதிநிதிகளை கௌரவித்திருந்தது. பிரதானமாக பெருமளவு பெறுமதி வாய்ந்த கொழும்பு மற்றும் காலி பிரதேசங்களைச் சேர்ந்த சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்த மொஹமட் மொஹைதீன் காசிம், திருமதி. கே.சேனநாயக்க, ஆசிரிபால மற்றும் நிமல்சிரி விக்ரமசேகர ஆகியோருக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளை வழங்கியிருந்தது.

தமது வெற்றிகரமான செயற்பாடு தொடர்பில் காசிம் கருத்து தெரிவிக்கையில், 'ஒரு வருட காலப்பகுதிக்கு மேலாக மஹாபொல லொட்டோ உடன் பணியாற்றுவதன் மூலமாக, பெருமளவு அனுபவத்தை பெற்றுள்ளேன். அத்துடன், வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது தொடர்பிலும் அறிந்து கொண்டுள்ளேன். வாடிக்கையாளர்களுடன் நட்புறவாக பழகுவதன் மூலம், அவர்களை மீண்டும் மீண்டும் வரவைக்க முடியும் என்பதை அனுபவ ரீதியில் உணர்ந்து கொண்டேன'; என்றார்.

மஹாபொல லொட்டோ கூட்டாண்மை தொடர்பாடல்கள் முகாமையாளர் ஹர்ஷினி சிரிநந்த கருத்து தெரிவிக்கையில், 'எமது சிறந்த விற்பனை பிரதிநிதிகளை கௌரவிப்பது என்பது அதிகளவு வரவேற்கத்தக்க விடயமாகும். அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளை பகிர்ந்து கொள்வது மற்றும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்வது மூலமாக மஹாபொல லொட்டோ வலையமைப்பை மேலும் வளர்ச்சியடையச் செய்ய முடியும். சகல குழு அங்கத்தவர்களும் அவர்களின் சக அங்கத்தவர்கள் சிறப்பாக செயலாற்றியதை பார்த்து, தாமும் சிறப்பாக செயலாற்றுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்' என்றார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'அண்மையில் மஹாபொல லொட்டோ கொழும்பு தலைமையகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நாடு முழுவதும் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது பல விநியோகத்தர்களை இவர் சந்தித்து, வளர்ச்சிக்காக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை கேட்டறிந்திருந்தார். மேலும், அவர்களின் கருத்துப்படி, மஹாபொல லொட்டோ என்பது வேகமாக வளர்ச்சியடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. அடுத்து வரும் வாரங்களில் சந்தைப்படுத்தலுடன ; தொடர்புடைய பல செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .