2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

SALVATION ARMY சிறுவர்களுக்கு பெரன்டினா கணினிகள் அன்பளிப்பு

A.P.Mathan   / 2015 மே 27 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள Salvation Army சிறுவர் இல்லங்களுக்கு இரு கணினிகளை பெரன்டினா டிவலப்மன்ட் சேர்விசஸ் அண்மையில் அன்பளிப்பு செய்திருந்தது. 5 முதல் 17 வயதுக்குட்பட்ட 70க்கும் அதிகமான சிறுவர்கள் இந்த கணினிகள் மூலம் அனுகூலம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணினிகள் கையளிக்கும் வைபவம் ராஜகிரியவில் அமைந்துள்ள Salvation Army சிறுவர் இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், ராஜகிரிய இல்லத்தின் பொறுப்பதிகாரி கப்டன் சுஜித் புஷ்பகுமார, தெஹிவளை இல்லத்தின் பொறுப்பதிகாரி மேஜர். மேரி ரட்னசிங்கம், இரு இல்லங்களையும் சேர்ந்த கணினி விரிவுரையாளர் நரேஷ் மயில்வாகனம், பெரன்டினா அமைப்பின் தொடர்பாடல்கள் பிரிவின் தலைமை அதிகாரி சுரந்தி பொவன்கே மற்றும் தொடர்பாடல் மற்றும் நிதித் திரட்டல் பிரிவின் அதிகாரி சிரஜுல் அனம் மற்றும் இரு இல்லங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 சிறுவர்களும் பங்கேற்றிருந்தனர். 

இந்நிகழ்வில் பெரன்டினா சார்பாக சுரந்தி பொவன்கே கருத்து தெரிவிக்கையில், 'பெரன்டினா எனும் பெயர், முதலில் திருமதி. பெரன்டினா போர்ஸ்ட் சிறியளவிலான உதவி செயற்பாடுகளை யட்டியாந்தோட்டை பகுதியில் 1982 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்த போது சூட்டப்பட்டிருந்தது. தற்போது பெரன்டினா குழுமம் நான்கு கம்பனிகளை கொண்டுள்ளது. இதில் பெரன்டினா டிவலப்மன்ட் சேர்விசஸ், பெரன்டினா மைக்குரோஃபினான்ஸ் இன்ஸ்ரிடியுட், பெரன்டினா எம்ப்ளொய்மன்ட் சென்ரர் மற்றும் பெரன்டினா மைக்குரோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் கம்பனி போன்றன இதில் உள்ளடங்குகின்றன. இது இலங்கையில் 10 மாவட்டங்களில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. இந்த நான்கு கம்பனிகளும் பரந்தளவு வறுமை ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மைக்குரோஃபினான்ஸ் மற்றும் வியாபார அபிவிருத்தி சேவைகளுக்கான சேவைகளை கொண்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கான நேரடியான உதவிகள், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. மேலும் வசதி குறைந்த, பின்தங்கிய மற்றும் பெருந்தோட்ட இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளுடன் இணைக்கும் செயற்பாடுகளையும் பெரன்டினா முன்னெடுக்கிறது. மேலும் குறித்த இளைஞர்களுக்கு தொழில்சார் பயிற்சி புலமைப்பரிசில்களையும் வழங்குகிறது' என்றார்.

சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான இல்லங்கள் போன்றவற்றுக்கு உதவிகளை வழங்குவது என்பது பெரன்டினா சமூக நலன்புரி செயற்பாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது. 2014 இல் 3.7 மில்லியன் ரூபாய் உதவிகள் இலங்கையில் வழங்கப்பட்டிருந்ததாக பொவன்கே மேலும் குறிப்பிட்டார்.

Salvation Army சார்பாக நன்றி உரையை நிகழ்த்தியிருந்த நரேஷ் மயில்வாகனம் கருத்து தெரிவிக்கையில், 'பெரன்டினாவுக்கும், அதன் தலைவர் துலான் டி சில்வா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்கொடை மூலமாக இந்த இல்லங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மத்தியில் கணினி அறிவை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்' என்றார்.

பெரன்டினா முன்னெடுக்கும் வறுமை ஒழிப்பு தொடர்பான மேலதிக விபரங்களை பார்வையிட www.berendina.org மற்றும் jobsberendina.com எனும் இணையத்தளங்களை பார்வையிடவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .