2026 மே 04, திங்கட்கிழமை

இலங்கையில் உண்மையில் ஆளுமை பற்றாக்குறை நிலவுகின்றதா?

A.P.Mathan   / 2015 ஜூன் 08 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதாரம் எதிர்நோக்கும் மாபெரும் சவாலானது எளிமையான தலைப்பினுள் உள்ளடங்கியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் ஒருபுறமும், மறுபுறம் தகுதிவாய்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறை என அது அமைந்துள்ளது. இதனடிப்படையில் அரசாங்க துண்டுப்பிரசுரங்கள், துறைசார்ந்த அறிக்கை வெளியீடுகள் மற்றும் பொருளாதார அறிக்கைகள் அனைத்தும் இலங்கையில் உண்மையில் ஆளுமை பற்றாக்குறை நிலவுகின்றதா என்பதை தெளிவுபடுத்த முனைகின்றன.

இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 21.6 சதவீதமான இளைஞர்கள் வேலையின்றி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 8.8 சதவீதமானவர்கள் உயர் கல்வித்தகைமைகளை கொண்டவர்களாக அமைந்துள்ளனர். ஊழியர்கள் மேலதிகமாக காணப்படல், தொழில் வழங்குநர்கள் போதியளவு தொழில்நுட்ப நிபுணத்துவமின்மையை எதிர்நோக்குகின்றமை போன்றவற்றுடன், திறமை தொழிலுக்கு பொருத்தமானதாக அமைந்திராமை, பட்டதாரி   தகைமைகளுக்கும் தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான முரண்பாடு போன்றன இதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன. 

இது ஏன் இடம்பெறுகிறது? ஆசிய பசுபிக் இன்டர்நெட் குழுமத்தின் மனிதவளங்கள் முகாமையாளர் நயோமி பின்கேர்டனின் பார்வையில், இலங்கை தொழில் சந்தையானது, தொழில் தேடுவோரின் தகைமைகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிராமை முக்கியமான விடயமாக அமைந்துள்ளது. 'ஆளுமை பற்றாக்குறை என நாம் கூறுவது, உண்மையில் தொடர்பாடல் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்' என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் அதிகளவு வாய்ப்புகள் காணப்படும் சந்தையில் இணைய பாவனை அதிகரித்த வண்ணமுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பெருமளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன. ஒன்லைன் மூலமான தொழில் விண்ணப்பங்களில் பெருமளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை எம்மால் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இணையத்தில் ஒரு நபரின் தொழில் விண்ணப்பத்தை கவனிப்பது என்பது உண்மையில் சவாலான விடயமாகும். டிஜிட்டல் முறை மூலமாக தொழிலுக்கமர்த்தும் காலகட்டத்தில், நேர்முகத்தேர்வுக்கான அழைப்பை பெறுகின்றமை மற்றும் மறுக்கப்படும் நிரலில் உள்ளடக்கப்படுகின்றமை என்பது இதன்போது சாதாரணமானதாக அமைந்துவிடுகிறது. 'இந்த பிரச்சனை ஆளுமையுடன் தொடர்புபட்டதாக நான் கருதவில்லை. ஆனாலும், இந்த ஆளுமைகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன, குறித்த தொழிலில் அவை எவ்வாறு உள்ளடக்கப்படுகின்றன என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன என நான் கருதுகிறேன். குறித்த பதவியில் அவர்கள் எவ்வாறு வெற்றிகரமாக பங்களிப்பை வழங்க முடியும் மற்றும் ஆளுமைகள் எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதை  ஒரு சில விண்ணப்பங்கள் மட்டுமே விபரிக்கும் வகையில் அமைந்திருத்தலே உண்மையில் இலங்கையின் பிரச்சனையாகும்' என நயோமி மேலும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர கல்விச் சேவைகளை வழங்கும் கல்வியகங்கள் போன்றன தாம் தொழில்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது பற்றிய விளக்கங்களை வழங்கும் வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை என குறிப்பிடக்கூடும். ஆனாலும், பெருமளவான மாணவர்கள் தாம் அது போன்றதொரு அறிவை பெற்றுக் கொள்வதாகவே கருதுகின்றனர். நிறைவில், கல்விச்சேவைகளை வழங்கும் கலாசாலைகள் மற்றும் தொழில் வழங்குநர்கள் மத்தியில் பெருமளவு இடைவெளிகள் காணப்படுகின்றமை இளைஞர்களின் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

ஆளுமை பற்றாக்குறைக்கான தீர்வு என்பது, வியாபார திட்டங்களுக்கு மாணவர்களை உள்வாங்குகின்றமை அல்லது தொழில்நுட்பமான பட்டப்படிப்புகளை வழங்குகின்றமை மூலமாக மட்டும் அமைந்துவிடாது. தொழில் வழங்குநர்களும் கல்வி வழங்கும் நிறுவனங்களும் முக்கியமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதன் மூலம் தீர்மானத்துக்கு வருகின்றமையின் மூலமாக இதற்கு தீர்வை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 'ஒன்லைன் தொழில் தளங்கள் தொழில் வழங்குநர்கள் மற்றும் கல்விச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கிடையிலான சிறந்த ஒன்றிணைவுக்கான சிறந்த வழிமுறையாகும்' என Everjobs இன் முகாமைத்துவ பணிப்பாளர் சாஷா வொல்க் தெரிவித்தார். 

'தொழில் தேடுநர் ஒருவர் எதிர்நோக்கும் சவால்களுக்கு இதன் மூலம் சிறந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Everjobs பற்றி
Everjobs இலங்கை, மியன்மார் மற்றும் கமரூன் போன்ற நாடுகளில் இயங்கும் ஒன்லைன் தொழில் தளமாகும். 2015 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தளமானது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் முன்னணி தொழில் தளமாக திகழ எதிர்பார்த்துள்ளது. தொழில் வழங்குநர்கள் மற்றும் விண்ணப்பதாரிகளுக்கு சிறந்த பொருத்தமான தெரிவாக அமைந்துள்ள இந்த தொழில் தளமானது ஆசிய பசுபிக் இன்டர்நெட் குழுமத்தின் பின்புலத்தை கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .