A.P.Mathan / 2015 ஜூன் 08 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
HNB ஜெனரல் தகாபுள் ஆனது HNB ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பனியில் ஷாரியா சட்டதிட்டங்களுக்கு அமைவாக காப்புறுதி தீர்வைகளை வழங்கிவரும் ஒரு பிரிவாக செயற்படுகிறது. இத்தகாபுள் பிரிவானது அண்மையில் நடைப்பெற்ற ளுடுஐடீகுஐ 2014/ 2015 விருது வழங்கும் விழாவில் வளர்ந்து வரும் நிலையான இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்காக வெண்கல விருதினை பெற்றுக்கொண்டது. இவ்விருதானது HNB ஜெனரல் தகாபுள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு மிகக்குறுகிய காலத்துக்குள் கிடைத்ததோடு இனிவரும் காலங்களில் HNB ஜெனரல் தகாபுளின் வளர்ச்சியை உறுதி செய்வதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைகின்றது.
HNB ஜெனரல் தகாபுள் ஆனது அனைத்து தகாபுள் தொடர்பான தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது HNB ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பனியின் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக பல தகாபுள் சேவைகளை வழங்குகின்றது. உதாரணமாக மோட்டார் தகாபுள், தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் இல்லங்கள் தொடர்பாக தகாபுள் திட்டங்களோடு இன்ஜினீரிங் தகாபுள், தீ தகாபுள், வைத்தியசாலைக்குட்படுத்தல் தகாபுள் மற்றும் திருட்டு தகாபுள் திட்டங்களையும் வழங்குகின்றது.
நாடங்கும் அமைந்துள்ள HNB ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பனியின் 52 கிளைகளிலும் HNB ஜெனரல் தகாபுள் பிரிவின் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் நாடெங்கிலுமுள்ள எமது காப்புறுதி வர்த்தக முகவர்கள் தனிப்பட்ட சேவைகளை வழங்க தயாராகவுள்ளனர். HNB ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பனியானது HNB அசூரன்ஸ் கம்பனியின் சேய் கம்பனியாகும்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .