A.P.Mathan / 2015 ஜூன் 10 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் பாதசாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பு தொடர்பான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட விசேட வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது.
பாதசாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்கான வீதிப் பாதுகாப்புகளை அபிவிருத்தி செய்யும் இந்த வீதிப் பாதுகாப்பு செயற்திட்டமானது தேசிய பாதுகாப்பு அபிவிருத்தி திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
இத் திட்டத்தின் முதற்கட்டமாக, நாட்டின் 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் மிக நெரிசலான இடங்களில் 200 பதாகைகளை வைப்பதற்கு ஜனசக்தி அனுசரணை வழங்கியிருந்தது. சமூக நல அமைச்சின் கீழ் தேசிய CSR மேலாண்மை திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்பட்ட இந்த பதாதைகள் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள், புதையிரத கடவைகள், சந்தி, குறுக்கு பாதைகள், பக்க சாலைகள், சுற்றுவட்ட பாதைகள் மற்றும் வழுக்கக்கூடிய வீதிகள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகளில் பாதசாரிகளுக்கு திசைகள் தவிர்ந்து, இடம் குறித்த முக்கிய தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
'பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மூலம் கடந்தாண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து சமூக நலன்புரி அமைச்சின் கீழ் இத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தினை முன்னெடுக்க தேசிய பாதுகாப்பு குழு பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அதிக விபத்துக்கள் ஏற்படுவதற்கான அபாயம் நிலவும் கொழும்பில் நாம் இதனை அறிமுகம் செய்துள்ளோம். பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனமான ஜனசக்திக்கு இத் திட்டத்திற்கு அனுசரணை வழங்குமாறு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். இதுவொரு தேசிய தேவைப்பாடு என்பதனால் தனியார்-பொதுத்துறை கைகோர்ப்பு எமக்கு தேவைப்பட்டது. இத் திட்டத்திற்கு ஜனசக்தி ஆதரவு வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்' என தேசிய கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு மேலாண்மை திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷந்த ஜயதிலக தெரிவித்தார்.
இந்த அறிமுக நிகழ்வில் பிரபல ஓட்டப்பந்தய வீரர் டிலந்த மலகமுக பங்குபற்றியிருந்தார். 'வீதி விபத்துக்கள் மூலம் பெரும்பாலான உயிர்கள் பலியாகி வருவதன் காரணமாக ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி பாதுகாப்பு தொடர்பான திட்டமொன்றை விஹாரமகாதேவி பூங்காவில் நாம் ஒழுங்கு செய்துள்ளோம். இந்த முன்னெடுப்பு நம் நாட்டிற்கு மிகவும் ஏற்றது. மக்கள் முறையான வீதி அறிவுறுத்தல்களை பின்பற்றினால் பெரும்பாலான விபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியும்;' என மலகமுவ குறிப்பிட்டார்.
'இந்த வீதிப் பாதுகாப்பு பதாகைகள் மூலம் வாகன ஓட்டுநர் திசைகள் பற்றி மட்டுமன்றி வீதி அபாயங்கள் தொடர்பிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டமானது விசேடமாக பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் உள்நாட்டு அதிகாரிகள் போன்ற பொது மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் விளைவாக முன்னெடுக்கப்பட்டது. இந்த பதாகைகள் அபாய சமிக்ஞைகளை வழங்குவதுடன், பாதுகாப்பான பயணம் தொடர்பான குறிப்புக்களையும் உள்ளடக்கியுள்ளன. இத் திட்டமானது உள்நாட்டு சமூகத்தினை பாதுகாக்கும் ஜனசக்தியின் அர்ப்பணிப்புடன் பொருந்துகிறது. இத்திட்டத்திற்கு அனுசரணை வழங்குவதையிட்டு நாம் பெருமையடைவதுடன், எதிர்காலத்தில் இத் திட்டத்தினை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளோம்' என வர்த்தக செயற்பாட்டு முகாமையாளர் கெலும் வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஜனசக்தி தொடர்ந்து அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. பாடசாலை மஞ்சள் கடவைகளில் போக்குவரத்து வார்டன்களாக பணியாற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அண்மையில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சில பாடசாலைகளுக்கு விசேட போக்குவரத்து வார்டன் சீருடைகளை ஜனசக்தி வழங்கியிருந்தது. நுவரெலியா பெண்கள் உயர் கல்லூரி, நுவரெலியா காமினி மத்திய கல்லூரி, பம்பரகல்ல மகா வித்தியாலயம் மற்றும் மீபிலமான மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களுக்கே இத்தகைய உத்தியோகபூர்வ வார்டன் சீருடைகள் வழங்கப்பட்டிருந்தன. இத் திட்டத்திற்கு பல்வேறு பாடசாலைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற உயர் கோரிக்கைகள் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது.
மேலும் ஜனசக்தி மூலம் வாகன செயலிழப்பு மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் அண்மையில் யாழ் நகரில் இலவச வாகன பரிசோதனைகள் மற்றும் அறிவுரைகளை மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்கு வழங்கும் முகமாக மோட்டார் கிளினிக் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .