Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 18 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசத்தின் முன்னணி பன்முக நிறுவனமான சியோகா(நவலோக ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனம்) அதற்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமும், ஸ்டைலான உட்புற அலங்காரம் மற்றும் நேர்த்தியான அலங்காரங்களுக்கு பிரபல்யமிக்கதுமான Koala (பிரைவட்) லிமிடெட் நிறுவனமானது அண்மையில் விருந்தோம்பல் துறையின் முன்னணி ஹோட்டல்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் பங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதன் புதிய நவநாகரீக மற்றும் பன்முக Vicrila Glassware மற்றும் Flatware தெரிவுகளை Koala விருந்தோம்பல் மற்றும் சில்லறை தொகுப்பில் இணைத்துக் கொண்டது.
இந் நிகழ்வில் Koala (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் நில்கா தாபரே கருத்து தெரிவிக்கையில, 'கடந்த 20 ஆண்டுகளாக Koala என்றுமே நேர்த்தியான வாழ்க்கைமுறைகள் மற்றும் உட்புற அலங்காரம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நாம் வர்த்தகம் மற்றும் வீட்டு உட்புற அலங்காரம் சார்ந்த கருத்துக்கள், வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் மற்றும் துருப்பிடிக்காத ஸ்டீல் கட்டுமானங்கள் போன்ற ஏனைய வாழ்க்கைமுறை அம்சங்களை விரிவாக்கி வந்துள்ளோம். Koala tabletop தெரிவிலுள்ள cutlery, crockery, கண்ணாடி சாதனங்கள் ஆகியன சந்தையில் நாம் வழங்கிவரும் சமீபத்திய தெரிவுகளாக அமைந்துள்ளன' என மேலும் அவர் தெரிவித்தார்.
2015 ஹோட்டல் ஷோ கொழும்பு நிகழ்வுடன் இணைந்து நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் கடந்த 120 ஆண்டுகளாக விருந்தோம்பல் துறையில் அதன் முழுமை, வகை மற்றும் தரம் ஆகியவற்றுக்கான உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஸ்பெயின் நாட்டின் கண்ணாடி பொருட்களுக்கான பழைமையானதும் மற்றும் சிறந்த உற்பத்தியாளருமான Vicrila வர்த்தகநாமத்தினை அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
'புகழ்பெற்ற வர்த்தகநாமமான Vicrila உடன் கைகோர்ப்பது நிச்சயமாக எமக்கு பெருமையளிக்கிறது. இந்த கைகோர்ப்பானது எமது உற்பத்தி வரிசைகளை மேம்படுத்திக் கொள்ளவும், விருந்தோம்பல் துறையில் புதுமையான தீர்வுகளை வழங்கவும் வழிவகுக்கும்' என Koala நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தக அபிவிருத்தி பிரிவின் தலைவர் இம்தியாஸ் அஸீஸ் தெரிவித்தார். 'எமது நீண்டகால பயணத்தில் வெறும் வலிமை காரணமாக மட்டுமன்றி, தலைசிறந்த வடிவமைப்புகளின் வழங்கல்களினாலும் Vicirla ஆனது சிறந்து விளங்குகின்றமை குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்' என்றார். Vicirla இன் புதிய உற்பத்தி தெரிவுகள் HORECA துறையில் வாழ்க்கைமுறைகளை மறுவரையறுப்பதற்கான Koala இன் உறுதிப்பாட்டினை உள்ளடக்குவதாக அமைந்துள்ளது' என மேலும் தெரிவித்தார்.
Vicrila நிறுவனம் கண்ணாடி தயாரிப்புகளுக்காக தம்மை அர்ப்பணித்துள்ளதுடன், HORECA துறை (ஹோட்டல், ரெஸ்டோரன்ட் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள்) போன்ற பரபரப்பான சூழலுக்கு விசேடமாக வடிவமைத்து வருகிறது. உயர் தரமான உற்பத்திகள் மற்றும் புதுமையான வடிவமைப்புக்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளருக்கு பரிபூரணமான tabletop தீர்வுகளை வழங்குவதற்காக Vicrila தெரிவுகளுக்கான பிரத்தியேக விநியோகஸ்தராக Koala நியமிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரச் சான்றிதழ்கள், அறிவு, அனுபவம் மற்றும் உற்பத்தி செயல்பாடுகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியன உலகளாவிய HORECA சந்தையில் அதியுயர் ஸ்தானத்தை Vicrila இற்கு ஈட்டிக் கொடுத்துள்ளது.
ஏனைய கண்ணாடி பொருட்களுடன் ஒப்பிடுகையில், Vicrila தெரிவுகளின் வெப்பமேற்றல் செயற்பாடானது இவ்வுற்பத்திகளுக்கு இயந்திர தாக்கங்களை தாங்கக்கூடிய திறனை வழங்குவதுடன், திடப்படுத்தப்படாத பொருட்களை விட உற்பத்தியின் ஆயுட்காலம் ஐந்து மடங்கு அதிகரிக்கப்படுகின்றது.
மேலும் இந்நிகழ்வில் பங்குபற்றிய Vicrila நிறுவனத்தின் விற்பனை ஆலோசகர் (ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியம்) அலிஸ்டயர் வில்கொக்ஸ் திடப்படுத்தப்பட்ட கண்ணாடி பொருட்களின் பயன்பாட்டின் நன்மைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தார். இதன்போது அவர் மஹகோனி மரக்கட்டையில் ஆணியொன்றை அடிப்பதற்காக சுத்தியலாக திடப்படுத்தப்பட்ட சிவப்பு வைன் குவளையை பயன்படுத்தியமை அங்கு கூடியிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் கண்ணாடி பொருட்கள் மற்றும் cutlery பயன்படுத்தி வழங்கப்பட்ட மென்மையான இசை விருந்தினர்களை களிப்பூட்டுவதாக அமைந்திருந்தது.
இந் நிகழ்வில் Koala ஆனது USA Oneida மற்றும் Saint Andrea Flatware(cutlery), மத்திய தர ஹோட்டல்களுக்காக விசேடமாக சந்தைப்படுத்தப்பட்ட 'KOALA 18/10 Stainless” Cutlery, banquet settings மற்றும் தரமான சில்லறை பேக்கேஜிங், ஜேர்மனி Schonwald Dinnerware (crockery) மற்றும் Ariane- சிறப்பான பொசீலின் மற்றும் இந்தியாவின் அழகிய மற்றும் நேர்த்தியான இரவுணவுச் சாதன வர்த்தகநாமங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந் நிகழ்வானது Koala மற்றும் ஹோட்டல் எம்போரியம் லங்கா ஆகியவற்றின் விநியோகப் பங்காண்மையை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. இந்த முக்கியமான கூட்டிணைவு ஊடாக, சிறந்த உற்பத்தி தெரிவுகள் நாடளாவிய ரீதியில் HORECA துறைக்கு சென்றடையவுள்ளது.
Koala ஆனது அதன் உற்பத்தி வரிசைகள் தொடர்பில் மேலும் விழிப்புணர்வூட்டும் வகையில், ஹோட்டல் ஷோ கொழும்பு 2015இல் அதன் தெரிவுகளை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த வருடாந்த ஹோட்டல் ஷோ நிகழ்வானது உள்நாட்டின் விருந்தோம்பல் சந்தையிலுள்ள சமீபத்திய உற்பத்திகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்கான சிறந்த தளமாக விளங்குகிறது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago