Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 22 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் நுண் வியாபாரத் துறையை கட்டியெழுப்ப தொடர்ச்சியாக முன்னேற்றும் வகையில், அதிர்ஷ்ட லொத்தர் விற்பனையில் புத்தாக்கங்களை அறிமுகம் செய்துள்ள மஹாபொல லொட்டோ,தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களில் ஒன்றாக,முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 'திவியட்ட திரிய' (வாழ்க்கைக்கான துணிவு) எனும் நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விரைவாக மஹாபொல லொட்டோ விநியோக செயற்பாடுகளை நிறுவி முன்னெடுக்கக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப முதலீடுகளை மஹாபொல லொட்டோ பொறுப்பேற்றுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டம் 2015 ஜுன் மாதம் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பொரளையில் மஹாபொல லொட்டோ மையத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த சமூக பொறுப்புணர்வு செய்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் பங்குபற்றுநர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த பிரத்தியேகமான சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் கட்டமாக, மஹாபொல லொட்டோ,கம்பனியின் உரிமையாண்மையின் கீழ் காணப்படும் முச்சக்கர வண்டிகளை,'திவியட்ட திரிய' திட்டத்துடன் இணைந்து கொள்வோருக்கு வழங்கியுள்ளது.இந்த முச்சக்கர வண்டிகள் லீசிங் அல்லது எவ்விதமான முற்கொடுப்பனவுகளுமின்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும், எனவே, குறைந்தளவு வருமானம் பெறும் நிலையைச் சேர்ந்த சிறியளவிலான தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு சிறந்த சந்தர்ப்பாமக அமைந்துள்ளது.
காலப்போக்கில் மஹாபொல லொட்டோ 'Diviyata Diriya' நுண் வியாபார செயற்பாடுகளின் நோக்கம் என்பது,குறித்த சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு தமது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள அவசியமான பொருட்களை இலவசமாக பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக மஹாபொல லொட்டோ டிக்கட் இயந்திரங்கள் (terminals), மஹாபொல லொட்டோ வர்த்தக நாமம் பதித்தல் மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுநர்களுக்கு top-up வவுச்சர்கள்போன்றன அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். எனவே,அவர்களுக்கு தமது சிறியளவிலான வியாபார நடவடிக்கைகளை சரியான முறையில் ஆரம்பித்துக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும். ஆரம்ப நிலையிலிருந்தே இந்த சிறியளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு மஹாபொல லொட்டோ டிக்கட்கள் விற்பனையின் மூலமாக குறிப்பிடத்தக்களவு வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
'திவியட்ட திரிய' என்பது உள்ளூர் லொத்தர் துறையில் முன்னெடுக்கப்படும் முதலாவது சிறியளவிலான தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டமாகும். இது போன்ற திட்டங்களை முன்னெடுப்பதையிட்டு மஹாபொல லொட்டோ பெருமை கொள்கிறது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago