Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 29 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முதல் தர பாதுகாப்பான இலத்திரனியல் வயர்கள் மற்றும் தொடர்பாடல் வயர்கள் உற்பத்தியில் ஈடுபடும் களனி கேபிள்ஸ் பிஎல்சி, தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான |களனி சவிய' திட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துடன் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது.
களனி கேபிள்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன ஆகியோர், அண்மையில் களனி கிளாரியன் ஹோட்டலில் இடம்பெற்ற களனி சவிய திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக தமது கற்கைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கையளிக்கும் வைபவத்தில் பங்கேற்றிருந்தனர்.
இலத்திரனியல் பொறியியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துடன் இணைந்து 2007 ஆம் ஆண்டில் |களனி சவிய' சமூக பொறுப்புணர்வு திட்டம் ஆரம்பித்திருந்தது.
களனி கேபிள்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், 'பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தவர்களும், ஆரம்ப நிலையிலுள்ள இலத்திரனியல் பொறியியலாளர்களுக்கும் சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு களனி சவிய பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. இலத்திரனியல் பொறியியல் பயிற்சி திட்டம் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமாக அமைந்துள்ளதுடன், இது வரையில் நாடு முழுவதையும் சேர்ந்த 250க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளது. இதில் பெருமளவானோர் தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்ற இணைந்துள்ளனர், தமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எய்தியுள்ளனர். இந்த பயிற்சித்திட்டங்களை முன்னெடுக்கின்றமைக்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். க.பொ.த சாதாரண தர கல்வித் தகைமையை கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழக சான்றிதழை பெற்றுக் கொடுக்கும் ஒரே பயிற்சித் திட்டமாக களனி சவிய அமைந்துள்ளது' என்றார்.
நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் உள்ளடங்கலாக ஏனைய பகுதிகளுக்கும் 'களனி சவிய| திட்டத்தை விஸ்தரிப்பதற்கு களனி கேபிள்ஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் குறிப்பிட்டிருந்ததுடன், களனி சக்தி எனும் தொனிப்பொருளில் கடந்த ஆண்டில் நாம் இந்த திட்டத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்து வடக்கு கிழ்க்கில் முன்னெடுத்திருந்தோம் என்றார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர். அதுல சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'களனி சவிய என்பது, மாணவர்களுக்கு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலமைந்த திட்டமாக அமைந்துள்ளது. 'இந்த கற்கையை பூர்த்தி செய்து, இன்றைய தினம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்ட மாணவர்கள் நாட்டின் கல்வித் துறையில் விசேட நிலையில் உள்ளவர்களாக அமைந்துள்ளனர். இந்த சான்றிதழ் பெற்றவர்களிடம் நான் ஒரு தாழ்ந்த வேண்டுகோளை விடுக்கிறேன், பேராதனை பல்கலைக்கழகம் நாட்டின் கல்வித்துறையில் முன்னிலையாளராக திகழ்கிறது. தொழில்நுட்ப அறிவை வழங்குவது, மக்கள் மத்தியில் சிறந்த தொடர்பாடல்களை பேணுவது என்பவற்றை பொறுத்தமட்டில், இந்த பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த உத்வேகத்தை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பை நீங்களும் கொண்டுள்ளீர்கள்' என உபவேந்தர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் தலைமை அதிகாரி பேராசிரியர் எல். ராஜபக்ஷ, களனி சவிய நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மஞ்சுள பெர்னான்டோ, களனி கேபிள்ஸ் பிஎல்சி விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க, பிரதம நிதி அதிகாரி ஹேமமாலா கருணாசேகர, செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் உபுல் மஹாநாம, மனித வளங்கள் பிரிவின் முகாமையாளர் கிஹான் விதானகே மற்றும் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
களனி சவிய கற்கையை பூர்த்தியை செய்த ஆறாம் தொகுதி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், களனி கேபிள்ஸ் விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க உரையாற்றியிருந்தார். 'கடந்த ஆண்டுகளில் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கான தேவை அதிகரித்திருந்தது. போதியளவு அனுபவமின்மை காரணமாக, இந்த தேவையை நிவர்த்தி செய்ய முடியாத காணப்பட்டது. எனவே, களனி சவிய சான்றிதழ் வைத்திருப்போர், தமது அறிவை தொடர்ச்சியாக மெருகேற்றம் செய்து கொள்ள வேண்டியது முக்கிய தேவையாக அமைந்துள்ளது' என்றார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜே.பி.ஏக்கநாயக்க அவர்களின் சிந்தனை வெளிப்பாடாக களனி சவிய தோற்றம் பெற்றது. பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் எஸ்பிஎஸ் அபேகோன் மற்றும் களனி கேபிள்ஸ் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ஹேமந்த பெரேரா ஆகியோரிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலமாக இந்த திட்டம் ஆரம்பமாகியிருந்தது.
குறித்த நியதி நிபந்தனைகளுக்கு அமைவாக, 2012 இன் இறுதியில் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை நிறைவடைந்திருந்தது. ஆனாலும், களனி கேபிள்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால மற்றும் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட சுமூகமான உரையாடல்களை தொடர்ந்து இந்த திட்டம் 2017 ஆம் ஆண்டு வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.
உள்நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று, தனியார் துறையைச் சேரந்த நிறுவனமொன்றுடன் இணைந்து இதுபோன்றதொரு திட்டத்தை முன்னெடுத்த முதலாவது தடவையாக இது அமைந்துள்ளது.
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago