Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 02 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLARDAR-AMRC Tarmac சம்பியன்சிப் 2015 போட்டிகளில் பிரபல கார் ஓட்டப் பந்தய வீரர் தரின் வீரசிங்கவுக்கு யுனைட்டட் ட்ராக்டர்ஸ் அன்ட் இக்யுப்மன்ட் (UTE) அனுசரணை வழங்கியிருந்தது. இந்த போட்டித்தொடர் மே மாதம் 31 ஆம் திகதி கட்டுகுருந்த கார் ஓட்டப்பந்தயத்திடலில் இடம்பெற்றது. இந்த போட்டித்தொடரில் தரின் வீரசிங்க இரண்டாமிடத்தை பெற்றிருந்தார்.
பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட SLGT Super Car போட்டியில் Subaru STI X காரை செலுத்தியிருந்த வீரசிங்க, இரண்டாமிடத்தை பெற்றிருந்தார். தகுதிகாண் சுற்றின் போது வேகமான நேரத்தை பதிவு செய்திருந்த வீரசிங்க, முதலாமிடத்திலிருந்து போட்டியை ஆரம்பித்திருந்தார். இந்து போட்டியில் மொத்தமாக 19 சாரதிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரசிங்க மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருந்த சிறந்த பெறுபேறுகளில் இது மற்றுமொரு அம்சமாக அமைந்துள்ளதுடன், தென் எலியகந்த குன்று ஏறலுக்கான பிரீதி பள்ளியகுரு கேடயத்தையும் இவர் வெற்றியீட்டியிருந்தார். இந்த போட்டியை சதர்ன் மோட்டர் ஸ்போர்ட்ஸ் கழகம் (SMSC) ஏற்பாடு செய்திருந்தது. வீரசிங்க தனது பிரத்தியேக சாதனை நேரத்தை, மேலும் ஒரு செக்கனினால் குறைத்திருந்தமை விசேட அம்சமாகும். குன்று ஏறலுக்காக இவருக்கு 33.83 செக்கன்கள் மட்டுமே செலவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரசிங்க Tarmac Racing வீரர் என்பது மட்டுமல்லாமல், சிலோன் மோட்டர் ஸ்போர்ட்ஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ட்ராக் ரேசிங் சம்பியன்சிப் போட்டிகளின் தோல்யைத் தழுவாத சம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
UTE ஸ்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாயைமயாளர் நலின் மனோரட்ன கருத்து தெரிவிக்கையில், 'உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமமான கட்டர்பில்லரை UTE தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வர்த்தக நாமம் NASCAR ரேசிங் போன்ற விளையாட்டுகளுக்கு கடந்த ஆண்டுகளில் அனுசரணை வழங்கியிருந்ததுடன், குறிப்பாக இல 31 ரேசிங் அணிக்கும் அமெரிக்காவின் Caterpillar/Chevrolet வீரர் ரயன் நியுமனுக்கும் அனுசரணைகள் வழங்கப்பட்டிருந்தன. நாமும் தரினுக்கு தொடர்ச்சியாக அனுசரணைகளை வழங்க முன்வந்திருந்தோம், இவர் மிகவும் உற்சாகமான வீரர். கார் ஓட்டப்பந்தயத்தில் இவர் தனக்கென தனியிடத்தை பதித்துள்ளார். அணியை கட்டியெழுப்புவது மற்றும் கடுமையான உழைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அனுசரணைகள் அமைந்திருந்தன. இந்த செயற்பாடுகளை UTE முழு மனதுடன் ஆதரிக்கிறது' என்றார்.
மேலும், UTE தனது அனுசரணைகளை கொல்ஃப் விளையாட்டுக்கும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. குறிப்பாக இலங்கை திறந்த கொல்ஃப் சம்பியன்சிப் மற்றும் பின் அன்ட் பம் பெர்னான்டோ கேடயங்களுக்கு அனுசரணை வழங்குகிறது.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago