2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ராஜாயு பானத்தின் சிறப்பு

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைகழகத்தின் துணைநிறுவனமான கம்பஹா விக்கிரமாரச்சி ஆயுர்வேத கல்லூரி ஊடாக செயற்படுத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் மூலம் ராஜாயு பானத்தின் செயற்பாடுகள் சிறப்பானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

பழமை வாய்ந்த ஓளடதங்களின் சேர்க்கைகளை நவீன தொழில்நுட்பத்துடன் கலந்து ராஜாயு பானத்தை இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தக நாமமான நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகிக்கின்றது. ஓளடதங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நேச்சர்ஸ் சீக்ரட்ஸ், இலங்கையின் முதலாவது தனியார் தாவர ஆராய்ச்சிக்கூடத்தையும் அதனுடன் இணைந்த தாவர வளர்ப்பையும் மேற்கொண்டு இலங்கையின் தாவர ஆய்வுகளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திய பெருமையை கொண்ட நிறுவனமாகும்.  

காலனித்துவத்தின்போது இலங்கையில் தேயிலை,கோப்பி போன்ற பானங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மருத்துவ ரீதியாக தயாரிக்கப்பட்ட ஆவாரை, நன்னாரி, கொத்தமல்லி, குவிளம், இஞ்சி போன்ற ஓளடதங்களே  இலங்கையர்களால் பருகப்பட்டது. அத்தகைய ஓளடதங்களின் மூலப்பொருட்களையும் புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டே ராஜாயு உற்பத்தி செய்யப்படுகின்றது.  

அதற்கமைய ராஜாயு கொலஸ்ட்ரோல் ஃபைட்டரை நாளாந்தம் பானம் பண்ணினால் இரத்தத்தில் கொலஸ்ட்ரோலை கட்டுப்படுத்தலாம் எனவும், ராஜாயு சுகர் ரெகியூலேட்டரை பானம் பண்ணினால் இரத்தத்திலுள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்தலாம் எனவும் ராஜாயு கொலஸ்ட்ரோல் ஃபைடர் மற்றும் ராஜாயு சுகர் ரெகியூலேட்டர் உற்பத்தி தொடர்பாக கம்பஹா விக்கிரமாரச்சி ஆயுர்வேத கல்லூரியில் இடம்பெற்ற மருத்துவ ரீதியான ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பானத்தினால் சரீரத்திற்கு எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதும் விசேட அம்சமாகும். 

நிகழ்காலத்தில் அதிக வேலைப்பளுவின் மத்தியில் வாழ்கின்றவர்கள் சுகாதாரம் தொடர்பான அதின பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதிக கொலஸ்ட்ரோல் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு ஆகியன அதில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனவே அவற்றை கட்டுப்படுத்த ராஜாயு பானம் உதவும் என கூறலாம்.

மிக இலகுவாகவும் துரிதமாகவும் தயாரித்துக்கொள்ளக்;கூடிய சிறிய பக்கற்றுகளில் அடங்கியுள்ள ராஜாயு பானம் 100% இயற்கையான தன்மை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் வர்ணங்களோ, இராசயன பொருட்களோ, நீண்ட நாட்கள் வைத்திருப்பதற்கான செயற்களை மூலப்பொருட்களோ இல்லை. ஒரு பக்கற்றில் 7-8 வரையான ஓளடதங்களின் சேர்க்கைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்;ளதுடன் இதில் கெப்பின் அடங்காமையும் விசேட அம்சமாகும். 

தேநீர் அல்லது கோப்பி அருந்துவதற்கு பதிலாக தினந்தோறும் ராஜாயு செஷே பக்கற் ஒன்றை பானம் பண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், அது சரீரத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கும். 

ராஜாயு பான உற்பத்திகளை,ராஜாயு கொலஸ்ட்ரோல் ஃபைட்டர், ராஜாயு சுகர் ரெகியூலேட்டர், ராஜாயு மெமரி பூஸ்டர் மற்றும் ராஜாயு பொடி ஷேபர் என நான்கு சுவைகளில் பெற்றுக்கொள்ளலாம். அவற்றை ஆர்பிகோ,கீல்ஸ் வர்த்தக நிலையங்களில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பழைய ஒல்லாந்த வைத்தியசாலை வர்த்தகதொகுதியிலுள்ள Nature’s Secrets Beauty Spa மத்திய நிலையத்திலும் கொள்வனவு செய்யலாம். அத்துடன் நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் வெப் சொப் (Web Shop) ஆகிய www.luxurylife.lk ஊடாகவும் ராஜாயு பானத்தை இலகுவாக கொள்வனவு செய்து உங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து பெற்றுக்கொள்ளலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X