2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பென்டாபேபி உற்பத்திகளின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

A.P.Mathan   / 2015 ஜூலை 19 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதற்தரசிறார்களின் உற்பத்திவர்த்தக நாமமான பென்டாபேபி, சிறார்களின் சருமத்தை பாதுகாப்பது உறுதி என சர்வதேசதரம் வாய்ந்த அமெரிக்க மருத்துவ ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுவர்களின் உற்பத்திபொருளுக்கு சர்வதேசதரம் வாய்ந்த இத்தகையசான்றிதழ் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

அமெரிக்காவின் குனுயுநிறுவனத்தின் (Food & Drug Administration) அனுமதியை பெற்ற நியூயோர்க் நகரில் அமைந்துள்ள சருமநோய் மற்றும் சிறுவர் நோய் விசேட வைத்தியர் குழுவொன்றினால் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பென்டாபேபி உற்பத்திகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் மூலம் இந்ததகவல்கள் உறுதியாகியுள்ளன. 
பென்டா பேபி உற்பத்திகள், சிறார்களின் சருமத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத அதேவேளை சருமத்தை பாதுகாத்து சருமத்திற்கு முழுமையான போஷாக்கு கொடுப்பதாக இதன் மூலம் உறுதியாகியுள்ளது. அதற்கமைய முழுமையான நம்பிக்கையுடன் பென்டாபேபி உற்பத்திகளை தமது மழலைகளுக்கு பயன்படுத்த இலங்கை தாய்மார்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. செயற்கை எண்ணெய்கள் மற்றும் சிலிக்கன் அடங்காத சிறார்களுக்கான ஒரே உற்பத்தி பென்டாபேபி தயாரிப்புக்கள் ஆகும். உங்கள் மழலையின் சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சருமத்திற்கு தீங்கு விளைவிக்காமல் மிக பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவுகின்றது.  
பேபிகிறீம், பேபி ஷெம்பூ, பேபி வொஷ் ஆகியரகங்களில் பென்டாபேபி உற்பத்திகளை பெற்றுக்கொள்ளலாம்.

பென்டாபேபி உற்பத்திகளுக்கு கிடைத்த சர்வதேசஅங்கீகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி நிமல் புண்யசிறி, 'பென்டாபேபி உற்பத்திகள் சர்வதேச தரம் வாய்ந்தவை. ஐரோப்பாவின் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற பென்டாபேபி உற்பத்திகள் உள்ளுரில் காணப்படும் ஏனைய உற்பத்திகளுடன் ஒப்பிட முடியாத அளவிற்கு உயர்தரத்தை கொண்டு அமைந்துள்ளது. இலங்கையின் புகழை சர்வதேசத்திற்கு கொண்டுசென்ற இந்த உற்பத்தி தொடர்பாக அனைவரும் பெருமிதம் கொள்ளமுடியும்' என குறிப்பிட்டார். 

100% உள்ளுர் உற்பத்தியான பென்டாபேபி, உற்பத்திகளை தயாரித்து விநியோகிப்பது இலங்கையின் முதற்தர அழகுச்சாதன உற்பத்திகளை தயாரிக்கும் நேச்சர்ஸ் சீக்ரட்ஸின் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனமாகும். பாரம்பரியமாகவே முன்னெடுக்கப்படுகின்ற எமது மருத்துவ சேர்க்கைகளை புதிய தொழில்நுட்பத்துடன் கலந்து இந்த தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவ தாவரங்கள் தொடர்பாக நீண்டகாலமாகவே ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்ற நேச்சர்ஸ் பியூட்டிகிரியேஷன்ஸ் நிறுவனம், இலங்கையில் முதலாவது தனியார் தாவர ஆய்வுகூடத்தை அமைத்த நிறுவனமாகவும் விளங்குகின்றது. இலங்கையிலுள் தாவரங்கள் தொடர்பாக ஆய்வுகளை நடத்தி புதிய உற்பத்திகளை இலங்கைக்கும் சர்வதேச சந்தைக்கும் அறிமுகப்படுத்துகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X