Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 19 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர் கல்விச் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் Northshore College of Business & Technology, இங்கிலாந்து நாட்டில் பிரிஸ்டல் நகரை தளமாக கொண்ட உலகப் புகழ்பெற்ற மேற்கு இங்கிலாந்து (University of West of England) பல்கலைக்கழகத்தின் இலங்கையில் ஏகபோக பிரதிநிதித்துவத்தைப்பெற்ற கல்வியகமாக இருப்பதுடன் கொழும்புவில் நான்கு ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் Northshore அமைந்துள்ளது அதன் தனித்துவமாகும்.
மேலும் இலகுவாக சர்வதேசதரம் கொண்ட கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், சகலருக்கும் தொடர்பு கொள்ள அனுகூலமாக கொள்ளுப்பிட்டி ஆர் ஏ டி மெல் மாவத்தையில் இந்த புதிய தகவல் நிலையம் அமைந்துள்ளது. Northshore மூலமாக அடிப்படை பட்டமுன்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கை நெறிகள் இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் சிவில் பொறியியல் மென்பொருள் பொறியியல் மற்றும் வணிக முகாமைத்துவம் தொடர்பான பிரிவுகளில் வழங்கப்டுகின்றன. (Electronic Engineering, Information Technology, IT Engineering, Civil Engineering, Software Engineering, Business Management)
Northshore College of Business & Technology உயர் கல்லூரியின்; சந்தைப்படுத்தல் முகாமையாளர் Mr. A.R.M. Irshad கருத்து தெரிவிக்கையில் 'எமது நாடு தழுவிய தகவல் நிலையத்தை கொழும்பின் மையப்பகுதியில் ஆரம்பித்துள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் வழங்கும் சர்;வதேசரீதியில் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்புகட்கு பெருமளவு மாணவர்களை இணைத்துக்கொள்ள நாம் வழிகோலுகிறோம். இத்தகவல் நிலையத்தினூடாக இதற்கான கல்விசார் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த சூழலை ஏற்படுத்தியுள்ளோம்'; என்றார்.
உயர் வினைத்திறன் வாய்ந்த அதிகளவு தகுதிவாய்ந்த மற்றும் முழுநேரம் பணியாற்றும் விரிவுரையாளர்கள், அவர்களின் வழிகாட்டல்கள், பயிற்றுவித்தல் மற்றும் ஆலோசனை வழங்கல்கள் மூலமாக மாணவர்களுக்கு உயர் தரம் வாய்ந்த கல்வியையும் இலகுவில் நினைவில் வைத்திருக்கக்கூடிய பயிலல் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
Northshoreல் நீண்டகால உயர்கல்வி அனுபவம் மற்றும் தகுதிவாய்ந்த விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். முழு நேரமும் பணியாற்றும் விரிவுரையாளர்களை கொண்டு பாட நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது மாணவர்களுக்கு பெரிதும் அனுகூலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எவ்வேளையிலும் பட்டதாரி மாணவர்கள் உதவிகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
வெளியக உட்கட்டமைப்பு பயிற்றுவித்தல் மற்றும் கல்வி பயில்வதற்கான உதவிகள் போன்ற வசதிகளை Northshore ஒவ்வொரு மாணவருக்கும் உறுதி செய்கிறது. மாணவர்களுக்கு தமது இயலுமைகளுக்கமைய சிறப்பாக செயலாற்ற ஊக்குவிக்கும் வகையில் இவை அமைந்துள்ளன.
மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்துடன் பங்காண்மையை பேணும் இலங்கையில் காணப்படும் ஒரே கல்வியகமாக Northshore திகழ்கிறது. ஒவ்வொரு பட்டதாரியும் உலகத் தரம் வாய்ந்த உள்ளக பட்டப்டிப்புகளை பெற்றுக் கொள்வதை உறுதி செய்கிறது. கற்பித்தல் மதிப்பிடல் மற்றும் கணிப்பீடுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளின் கட்டமைப்பு மற்றும் பாடவிதானங்களை முன்னெடுத்தல் போன்ற மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நடைமுறைகளை போன்று Northshore இலங்கையில் முழுமையாகப் பிண்பற்றுகிறது.
பிரிஸ்டலில் அமைந்துள்ள மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் என்பது இங்கிலாந்தின் அதி நவீன வளர்ந்துவரும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அமைந்துள்ளதுடன் பிரித்தானியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. 27,000 க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 3,000 க்கும் அதிகமான ஊழியர்களையும் இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. பட்டமுன்படிப்பு பட்டப்பின்படிப்பு மற்றும் குறுங்கால அடிப்படையிலான கற்கைநெறிகள் என 600 க்கும் அதிகமான கற்கைநெறிகளை மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் தற்போது வழங்கி வருகிறது. மேற்கு இங்கிலாந்து பட்டதாரிகளில் 95% தம் பட்டப்படிப்பு பூர்த்தியான ஆறுமாத கால இடைவெளியில் தொழில்வாய்ப்பைப் பெறுகின்றனர்.
உயர்கல்விகளுக்கான தர உறுதிப்படுத்தும் முகவர் அமைப்பின் மூலமாக இந்த பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளமை மேலும் சிறப்புடையதாகும்.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago