Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயுள் காப்புறுதி கொள்கை ஒன்றின் போது இணங்கப்படும் முதிர்ச்சி கால அடிப்படை கொடுப்பனவுத் தொகை நன்மையில் எந்த விதமான குறைப்பும் செய்யாமல் அதில் ஐம்பது வீதம் வரை நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கும் உன்னதமான புதிய காப்புறுதி திட்டம் ஒன்றை செலிங்கோ லைஃப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது ஆயுள் காப்புறுதி துறையில் புதிய ஆர்வத்தை தூண்டியுள்ளது.
'செலிங்கோ லைஃப் சுப்ரீம்' என அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய காப்புறுதி கொள்கை பரவலான ஆயுள் காப்புறுதியை வழங்குகின்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மொத்தக் கொடுப்பனவு, முதிர்ச்சி காலத்தில் சராசரியை விட கூடுதலான பெறுமானம், கடுமையான நோய்களின் போது ஆஸ்பத்திரில் அனுமதித்தல் அல்லது பிரதான சத்திர சிகிச்சைக்கான உதவி என தெரிவுக்குட்பட்ட காப்பீடு என்பனவற்றையும் இந்தப் புதிய திட்டம் உள்ளடக்கியுள்ளது.
இது ஏனைய ஆயுள் காப்புறுதித் திட்டங்களில் இருந்தும் வித்தியாசமானது. முதிர்ச்சியின் போது அல்லது எதிர்பாராத முன்கூட்டிய மரணத்தின் போது உறுதி செய்யப்பட்ட மொத்த தொகையில் எந்த விதமான குறைப்புக்களும் இல்லாமல் உறுதி செய்யப்பட்ட தொகை அல்லது திரண்ட நிதி மீதி இதில் எது கூடியதோ அதற்கான கொடுப்பனவுக்கு இது உறுதி அளிக்கின்றது.
'இந்த உன்னதமான கொள்கை மூலம் ஆயுள் காப்புறுதி சற்று திகில் மிக்கதாக மாறியுள்ளது' என்று கூறினார் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன். 'உறுதி செய்யப்பட்ட மொத்த தொகையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பத்து முதல் இருபது வீதம் வரை வழங்கப்படுவதன் மூலம் காப்புறுதியாளர் நாட்டில் காப்புறுதி பிரிவில் தலைமை தாங்கும் நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்ளும் அதேவேளை கணிசமானதோர் தொகையை சம்பாதிக்கவும் முடிகின்றது' என்றார்
எனவே 'செலிங்கோ லைஃப் சுப்ரீம்' என்பது ஒரு காப்புறுதி திட்டம் மட்டுமன்றி ஒரு முதலீட்டுத் திட்டமாகவும் உள்ளது. இது பாதுகாப்பை வழங்குவதோடு மட்டும் அன்றி ஒருவரின் அபிலாஷைகளை யதார்த்தமாக்கும் நிலையையும் வழங்குகின்றது' என்று அவர் மேலும் கூறினார்.
12 ஆண்டுகளுக்கான இந்த செலிங்கோ லைஃப் சுப்ரீம் கொள்கை உறுதி செய்யப்பட்ட தொகையில் 20 வீதத்தை நான்காம் மற்றும் எட்டாம் ஆண்டுகளில் வழங்குகின்றது. 12வது வருட இறுதியில் முதிர்ச்சி கால தொகையை முற்றாக வழங்குகின்றது. 16 வருடங்களுக்கான ஒரு கொள்கையில் உறுதி செய்யப்பட்ட தொகையின் 15 வீதத்துக்கு சமனான தொகையை நான்காம், எட்டாம், 12ம் ஆண்டுகளில் வழங்குகின்றது. முதிர்ச்சி கால கொடுப்பனவும் புறம்பாக வழங்கப்படும். 20 வருடங்களுக்கான ஒரு காப்புறுதி கொள்கைக்கு முதல் 16 வருடங்களுக்கு ஒவ்வொரு நான்காண்டிலும் 12 வீத கொடுப்பனவு வழங்கப்படும்.
இந்த அடிப்படையில் 30 வயதான ஒருவர் அடிப்படை காப்பீட்டுத் தொகையான ஐந்து லட்சம் ருபாவை 30 ஆண்டுகளுக்கான ஒரு காப்பீடாகப் பெற்றுக் கொள்கின்ற போது ஒவ்வொரு நான்காண்டிலும் 60ஆயிரம் ரூபா வீதம் மொத்தம் 240000 ரூபாவை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இது அவர் காப்பீடாகப் பெற்றுக் கொள்ளும் தொகை அல்லது திரண்ட நிதிக்கு மேலதிகமான தொகையாகும். இந்தத் தொகையானது வருடாந்த பங்கிலாப தொகையாக கிடைக்கும் ஏழு வீதத்தோடு சேர்த்து சுமார் 950000 ருபா வரையில் செல்லக் கூடியது.
இதேபோல் 24 வருட கொள்கைக்கு நான்காம் மற்றும் 12ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பத்து வீதம் கொண்ட ஐந்து கட்ட கொடுப்பனவு வழங்கப்படும். காப்புறுதி கால முடிவில் மொத்த முதிர்ச்சி தொகையும் வழங்கப்படும். இது அவரின் முதிர்ச்சி கால நன்மைகளுக்கு மேலதிகமாக சுமார் ஐம்பது வீத கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும்.
இவற்றுக்கு மேலதிகமாக காப்புறுதிதாரர்கள் தமது காப்புறுதியின் பெறுமதியை அவ்வப்போது கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையில் அதிகரித்துக் கொள்ளவும் முடியும். காப்பீட்டை அதிகரிக்கும் செலிங்கோ லைஃப் குடும்ப பாதுகாப்பு நன்மைகள், வாழ்க்கைத் துணைக்கு காப்பீட்டை விஸ்தரிக்கும் யுகதிவி நன்மைகள், 36 வகையான பாரிய நோய்களுக்கும் 526 வகையான பிரதான சத்திர சிகிச்சைகளுக்கும், ஏனைய நன்மைகளுக்கும் வழவகுக்கும் காப்பீட்டை வழங்கும் குடும்ப திகாசிறி என்பன இதில் அடங்கும்.
ஆயுள் காப்புறுதித் துறையில் 2004 முதல் நாட்டில் தலைமை தாங்கும் நிறுவனமான செலிங்கோ லைஃப் செயற்படு நிலையில் உள்ள பத்து லட்சத்துக்கும் அதிகமான காப்புறுதிக் கொள்கைகளைக் கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். உள்ளுர் காப்புறுதித்துறையில் புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தி ஆராய்ச்சி, அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி, மற்றும் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்காக பெரும் பாராட்டுக்களையும் வென்றுள்ள ஒரு நிறுவனமாகும்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago