2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

220 மில். அமெ. டொ. முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் சீனி ஆலை அமைக்க முடிவு

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

220 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சீனி ஆலையை அமைப்பதற்கு இந்தியாவின் ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் லிமிடெட் முன்வந்துள்ளது.

இந்த முதலீட்டு நடவடிக்கைகளை தனது இலங்கையின் அங்கத்துவ நிறுவனமான லங்கா சுகர் (பிரைவேற்) லிமிடெட் மூலம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 300 பேருக்கு நேரடி தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதுடன், மறைமுகமாக சுமார் 1500 தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

முதல் ஆறு வருடங்களில் இந்த தொழிற்சாலையின் மூலம் 100,000 மெட்ரிக் தொன் சீனி வருடமொன்றுக்கு உற்பத்தி செய்யப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் இந்த அளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நிர்வாகம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .