Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிபொன் பெயின்ட், Asia Young Designer Awards (AYDA) நிகழ்வில் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வை அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கையிலிருந்து இரு தங்க விருதுகள் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கட்டடக்கலைப் பிரிவு மற்றும் உள்ளக அலங்கார வடிவமைப்பு பிரிவு ஆகியப் பிரிவுகளிலிருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு தலா ரூ. 100,000 பணிப்பரிசு வழங்கப்பட்டதுடன், 2017 மார்ச் மாதம் இந்தோனேசியாவின், யொக்யகார்தா நகரில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. CSA கல்வியகத்தின் பிரதீபன் கலைஈசன் மற்றும் மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் சந்திம கவரம்மான ஆகியோர் AYDA குழுவில் இறுதிப்போட்டியில் பங்கேற்ற 28 போட்டியாளர்கள் மத்தியில் இரு வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
AYDA அல்லது ஆசிய இளம் அலங்கார வடிவமைப்பாளர் விருது என்பது, இளம் கட்டடக்கலைஞர்கள் மற்றும் உள்ளக அலங்கார வடிவமைப்பாளர்களை ஊக்குவித்து, அவர்களின் புத்தாக்கத்திறன், கண்டுபிடிப்புத்திறன் மற்றும் அவர்களின் நிபுணத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 2008இல் முதல் தடவையாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. AYDA 2016இன் இலங்கையின் கட்டம், 2016 ஜுன் 13ஆம் திகதி “Be Bold, Be Free, Be You” எனும் தொனிப்பொருளில் ஆரம்பமாகியிருந்தது.
“நிபொன் பெயின்ட் லங்கா முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜா ஹேவாபோவல கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் கட்டடக்கலைத் தொடர்பான பிரதான அமைப்பாக திகழும் இலங்கைக் கட்டடக்கலைஞர்கள் கல்வியகத்திடமிருந்து பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதையிட்டு நிபொன் பெயனிட் ஸ்ரீ லங்கா திருப்தியடைகிறது” என்றார்.இந்தப் போட்டி இலங்கை கட்டடக்கலைஞர்கள் கல்வியகத்தின் பரிபூரண மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது. வெவ்வேறு பிரிவுகளில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பை நிறுவனம் ஏற்றிருந்தது.
கட்டடக்கலை 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கும், உள்ளக அலங்கார வடிவமைப்பு 2ஆம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு திறந்திருந்த இந்தப் போட்டி பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியிருந்தது. இரு பிரிவுகளில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்திருந்த இலங்கைக் கட்டடக்கலைஞர்கள் கல்வியகம், தங்கம், வெள்ளி, சிறந்த வர்ணம் மற்றும் சூழல் பாதுகாப்பான புத்தாக்கம் ஆகிய விருதுகளை வழங்கியிருந்தது.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025