Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் தலைசிறந்த வர்த்தகநாமங்களுக்கான முதற்தர தகவல் தொழில்நுட்ப சில்லறை விற்பனையாளரும், இலங்கையின் பல்துறைசார் பெருநிறுவனமான மெட்ரோபொலிடன் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமுமான மெட்ரோபொலிடன் கம்ப்யூட்டர்ஸ்(பிரைவட்) லிமிடெட் நிறுவனம் அதன் புதுமையான Acer மற்றும் Canon உற்பத்திகளை அண்மையில் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற விநியோகஸ்தர்களுக்கான பிரத்தியேக நிகழ்வொன்றின் போது அறிமுகம் செய்தது.
இந் நிகழ்வில் நாடு முழுவதுமிருந்து Acer மற்றும் Canon உற்பத்திகளுக்கான மறு விற்பனையாளர்கள் மற்றும் மெட்ரோபொலிடன் குழுமத்தைச் சேர்ந்த சிரேஷ்ட நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
'போட்டிமிக்க சந்தைச் சூழலில் இலங்கையில் குறிப்பிடத்தக்க வியாபார வளர்ச்சியை மெட்ரோபொலிடன் கம்ப்யூட்டர்ஸ் அடைந்துள்ளமை குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம். பல்செயற்பாட்டு அச்சுப்பொறிகள் மற்றும் அச்சிடல் தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கி உள்நாட்டு வர்த்தகங்களுக்கு தமது அபிலாஷைகளை வளர்த்துக்கொள்வதற்கான உதவிகள் உள்ளிட்ட புதுமையான உற்பத்திகளை வழங்கி Canon சாதனை படைத்துள்ளது' என Canon சிங்கப்பூர்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதேச சந்தைப்படுத்தல் அதிகாரி மெலனி பே தெரிவித்தார்.
உலகளவில் நன்கறியப்பட்ட வர்த்தகநாமங்கள் எனும் ரீதியில் அதன் விற்பனை திட்டங்கள் மற்றும் தற்போதைய பங்காளர்களுடனான வலுவான உறவினை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய Acer மற்றும் Canon உற்பத்திகளுடன் மறு விற்பனையாளர்களை ஈடுபடுத்த மற்றும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் Acer Aspire E5 வரிசைகள் மற்றும் Acer Aspire V-Nitro போன்ற உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஒத்த தெரிவுகளின் கிடைக்கும் சாதாரண மடிக்கணினிகளை காட்டிலும் அதிக அம்சங்கள் Acer Aspire E5 வரிசையில் உள்ளடங்கியுள்ளது. இந்த வகை மடிக்கணனிகள் இரண்டு வருட உத்தரவாதம் மற்றும் 1TB ஹார்ட் ட்ரைவ் உடன் கிடைக்கிறது. வெவ்வேறு அளவுகளினாலான திரை மற்றும் வர்ணமயமான தெரிவுகள் பாவனையாளரின் மாறுபட்ட வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாக உள்ளது. இந்த வரிசைகளில் அர்ப்பணிக்கப்பட்ட NVIDIA GeForce 920M இன் கிராஃபிக்ஸ் அட்டை காணப்படுகிறது.
6th Gen HQ processor, 16GB RAM, SSD Drive ஆகிய உன்னத அம்சங்களுடன், மிகச்சிறந்த முறையில் விளையாடும் அனுபவம் மற்றும் வலுமிக்க செயற்திறன் உறுதி செய்யும் வகையில் Acer Aspire V-Nitro அமைந்துள்ளது. மெல்லிய வடிவம் மற்றும் நேர்த்தியான வெளியக அமைப்பு கவர்ச்சியூட்டுவதாக காணப்படுகிறது.
'வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் ஓர் அனுபவத்தை வழங்கும் வகையில் சிறந்த உற்பத்தித்திறன், கல்வி, பொழுதுபோக்கு, விளையாடும் திறன், தொடர்பாடல் மற்றும் அதிக மக்கள் தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய வசதியை ஏற்படுத்தும் வகையிலேயே Acer இன் புதிய உற்பத்திகள் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோபொலிடன் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் முன்னிலைப்படுத்திய அணுகல் முறையானது Acer உற்பத்திகளைப் போலவே அதே மட்டத்தில் வாடிக்கையாளருக்கு அதிக சேவைகள் மற்றும் ஆதரவு கிடைக்கப்பெறுவதை உறுதி செய்கிறது' என Acer கம்ப்யூட்டர் (சிங்கப்பூர்) பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் பிராந்திய விற்பனை பிரிவு பணிப்பாளார் சுனில் நாயர் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் Pixma IP 2870S மற்றும் MG 2570S ஆகிய ஆரம்ப மட்ட Canon அச்சுப்பொறிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இந்த புதிய அச்சுப்பொறிகளில் சிறியது முதல் பெரிய அளவிலான காட்ரிஜ்களை பயன்படுத்த முடியும். பயன்படுத்துநர்கள் தமது பயன்பாட்டுக்கு ஏற்ப தேவையான கார்ட்ரிஜ்களை கொள்வனவு செய்ய முடிவதுடன், எந்தவொரு இயந்திரத்திலும் பயன்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. புதிய அச்சுப்பொறி ஒன்றினை கொள்வனவு செய்ய செலவிடும் அதே தொகையை மீள்நிரப்புதலுக்கும் செலவிட வேண்டியுள்ளமையால் கொள்வனவாளர்களின் பிரதான கவலையாக உள்ளமையால், இந்த புதிய தெரிவுகள் ஊடாக ரூ.1230 எனும் மலிவு விலையில் சகாயமிக்க கார்ட்ரிஜ்கள் அறிமுகம் செய்துள்ளோம்.
இந்நிகழ்வில் Canon’s இன் Maxify வரிசைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறிய மற்றும் வீட்டு அலுவலகங்களின் உயர் தொகுதி, வர்ண அச்சுத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய வர்த்தக inkjet அச்சுப்பொறி தெரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய தெரிவுகள் குறைந்தபட்சம் ஒரு காகிதத்திற்கு 50% வீதமான குறைந்த செலவினை உறுதி செய்கிறது. Maxify inkjet அச்சுப்பொறி தெரிவுகளின் செலவுகள் கட்டுப்பாடு மற்றும் 500 காகிதங்கள் வரை தாங்கும் திறன் போன்றன அதி வேகமான அச்சிடலை மேற்கொள்வதுடன், வாடிக்கையாளர் தேடும் நிபுணத்துவமிக்க தரமான வர்ண அச்சிடல் மற்றும் உயர்தர பிரதி எடுத்தல், ஸ்கேனிங் மற்றும்; தொலைநகல் போன்றவற்றை பூர்த்தி செய்கிறது.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மெட்ரோபொலிடன் கம்ப்யூட்டர்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஐவர் மஹஃரூப், 'எமது புத்தம்புதிய Acer மற்றும் Canon உற்பத்திகள் தொடர்பில் எமது பங்காளர்களை தெளிவுபடுத்தவும், உள்நாட்டு சந்தையில் மெட்ரோபொலிடன் கம்ப்யூட்டர்ஸ் வழங்கிவரும் புதிய தொழில்நுட்பங்களுடன் அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு உதவும் வகையிலும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
'எமது பங்காளர்களின் பெறுமதிமிக்க பங்களிப்பானது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் அவர்களது நிலையான செயற்திறனுக்குமான தரமான சேவைகளை வழங்க வழிவகுத்துள்ளதுடன், இதுவே எமது சாதனைகளின் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எமது ஒட்டுமொத்த விற்பனை செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ள எமது விநியோகஸ்தர்கள் எமது பெரும் சொத்தாகும். அவர்களது ஆதரவை பாராட்டவும், கௌரவப்படுத்தக்கூடிய ஒரு சிறு நிகழ்வே இதுவாகும்' என மேலும் மஹஃரூப் குறிப்பிட்டார்.
இந்த புதிய உற்பத்திகளின் அறிமுகமானது மெட்ரோபொலிடன் கம்ப்யூட்டர் நிறுவனத்தினை புதுமையான, சகாயமான உற்பத்திகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக நிலைப்படுத்தியுள்ளதுடன், விநியோகஸ்தர்களுடனான வெற்றிகரமான நீண்டகால உறவினை பேணி சந்தை மீதான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
39 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
5 hours ago