2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

CICRA Campus இணைய பாதுகாப்பு நிபுணர்களை உருவாக்குகின்றது

Freelancer   / 2023 ஜூன் 02 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

CICRA Campus, சான்றளிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் அமெரிக்காவின் EC Council உடன் இணைந்து புதிய கற்கைநெறியை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

சான்றளிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு தொழில் தகைமை கற்கைநெறி பிரத்தியேகமாக இலங்கையில் இளங்கலை பட்டதாரிகளுக்கான கல்வித்திட்டத்தின் கீழ் CICRA Campus இல் வழங்கப்படுகிறது. இணைய அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்த்துப் போராட உதவும் இணையப் பாதுகாப்புக் கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் கருவிகள் பற்றிய விரிவான புரிதல் அறிவை மாணவர்களுக்கு வழங்குவதற்காக இந்த கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட கற்கைநெறி இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்பவர்கள் மற்றும் 18 மற்றும் 24 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், Certified Network Defender, Certified Ethical Hacker, மற்றும் Computer Hacking Forensic Investigator போன்ற தொழில்முறை சான்றிதழ்களை விசேட தள்ளுபடி கட்டணங்களில் வழங்குகிறது. சான்றளிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு தொழில் தகைமை கற்கைநெறி மற்றும் இளங்கலை மட்டப் படிப்பானது ஏறக்குறைய ரூ. 800,000 சேமிப்பைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், இளம் வயதிலேயே சான்றிதழ்களைப் பெறுவதன் மூலம் மாணவர்களின் தகைமை அந்தஸ்திற்கு மதிப்பு சேர்க்கிறது. அத்துடன், அவர்கள் தொழில் சந்தையில் வலுவான இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளவும் உதவுகிறது.

பிரதான இணைய பாதுகாப்பு கற்கைநெறி அலகுகளுக்கு மேலதிகமாக, இது CCNA கூறுகளையும் உள்ளடக்கியது. இது மாணவர்கள் கணினி வலையமைப்புக்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பை நன்கு புரிந்து கொள்ள உதவும்.

இந்த கற்கைநெறியின் கீழ் CICRA Campus இல் இருந்து தமது தகைமைகளைப் பெறும் சான்றளிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு தொழில் தகைமையாளர்களை அங்கீகரிப்பதற்காக CICRA Campus ஆனது இலங்கையில் உள்ள முன்னணி வணிக நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த ஒத்துழைப்பு மாணவர்களுக்கு மதிப்புமிக்க அனுபவத்தைப் பெறவும் நிஜ உலக இணைய பாதுகாப்பு சவால்களை வெளிப்படுத்தவும் உதவும். இதன் மூலம் அவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

CICRA Campus இன் குழும பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான போஷன் தயாரத்ன அவர்கள் கூறுகையில், 'அதிகரித்து வரும் இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, நிறுவனங்கள் டிஜிட்டல் தளங்கள் மற்றும் மொபைல் செயலிகளுக்கு மாறவேண்டிய ஒரு தேவைக்கான உந்துதலால், உலகளவில் திறமையான இணைய பாதுகாப்பு தொழில் தகைமையாளர்களுக்கு அவசரத் தேவை உள்ளது. இணைய பாதுகாப்பில் கல்வியை ஊக்குவிப்பதில் CICRA Campus உறுதிபூண்டுள்ளதுடன், இப்புதிய கற்கைநெறி அந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இது அவர்களை தொழில் சந்தையில் அதிக வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். இணைய பாதுகாப்பு தொடர்பான கல்வியை ஊக்குவிப்பதில் அது கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, சான்றளிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு தொழில் தகைமை கற்கைநெறியை முன்னெடுக்க விரும்புகின்ற தகுந்த இளங்கலை மாணவர்களுக்கு 10 புலமைப்பரிசில்களை CICRA Campus வழங்குகின்றது. இந்த புலமைப்பரிசில்கள் கற்கைநெறியின் முழு செலவையும் உள்ளடக்கும் என்பதுடன், கல்வித் தகுதி மற்றும் நிதித் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும்,' என்று குறிப்பிட்டார்.

CICRA Campus ஆல் ஆரம்பிக்கப்படுகின்ற சான்றளிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு தொழில் தகைமை கற்கைநெறியானது இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த இணைய பாதுகாப்பு கல்வியை வழங்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய படியாகும். இந்த கற்கைநெறியானது மாணவர்களுக்கு இணைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மதிப்புமிக்க சான்றளிப்பு அங்கீகாரங்களையும் அவர்களுக்கு வழங்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .