2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘Cycle to Work’ முன்னெடுப்புக்கு செலான் வங்கி வலுவூட்டல்

S.Sekar   / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப தமது சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், செலான் வங்கி, நாட்டின் சைக்கிள் விநியோகத்தர்களுடன் கைகோர்த்து, செலான் கடனட்டைதாரர்களுக்கு சைக்கிள்களை கொள்வனவு செய்யும் போது இலகு தவணைமுறை மீளக் கொடுப்பனவுத் திட்டத்தை வழங்க முன்வந்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழலில், சைக்கிள்களுக்கான கேள்வி பெருமளவில் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு இலங்கை முகங்கொடுத்துள்ளது. இந்த கேள்வி அதிகரிப்புடன், சைக்கிளின் விலைகளும் சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ளன. அதன் காரணமாக நுகர்வோருக்கு அத்தியாவசிய கொள்வனவுகளை மேற்கொள்வது பெரும் சவாலான விடயமாக அமைந்துள்ளது.

செலான் கடனட்டைதாரர்களுக்கு எந்தவொரு Tomahawk அல்லது Velo By City stores களுக்கு விஜயம் செய்து தமக்கு பிடித்த சைக்கிளை கொள்வனவு செய்ய முடியும். உதிரிப்பாகங்கள் மற்றும் சைக்கிள் சாதனங்களை ஒன்லைனில் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் அட்டைதாரர்களுக்கு இச்சலுகையை வழங்கும் வகையில் e-வணிக ஜாம்பவானாகத் திகழும் Daraz உடன் வங்கி கைகோர்த்துள்ளது. மின் சைக்கிள்களை நாடும் வாடிக்கையாளர்களுக்காக, செலான் வங்கி Fono Technologies உடன் கைகோர்த்துள்ளது.

இதில் எந்தவொரு விற்பனையாளர்களிடமிருந்தும் அட்டைதாரர்கள் கொள்வனவுகளை மேற்கொள்ளும் போது, 0% தவணைமுறை மீளச் செலுத்தல் வசதியை 12 மாத காலப்பகுதிக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தச் சலுகை தொடர்பில் செலான் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி ருச்சித் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நெருக்கடியான காலப்பகுதியில் எமது அட்டைதாரர்களுக்கு அவசியமான சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தாது வசதி வாய்ப்பை வழங்குவது முக்கியமானது என செலான் வங்கியைச் சேர்ந்த நாம் கருதுகின்றோம். இலங்கை இந்த நெருக்கடியான காலப்பகுதிக்கு முகங்கொடுத்துள்ள சூழலில், பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், சமூகத்தாருக்கு எம்மாலான பங்களிப்பை வழங்குகின்றோம்.” என்றார்.

0% தவணை முறை மீளச் செலுத்தல் திட்டத்தினூடாக அட்டைதாரர்களுக்கு நிதி நிவாரணம் வழங்கப்படும். இந்த வசதியைப் பயன்படுத்தி மேலும் வாடிக்கையாளர்கள் சைக்கிள்களை கொள்வனவு செய்வார்கள் என செலான் வங்கி எதிர்பார்ப்பதுடன், ஆரோக்கியமான சமூகம் மற்றும் தூய்மையான சூழலை ஏற்படுத்துவதில் பங்களிப்பு வழங்கும். நீண்ட கால அடிப்படையில் முதலீடாக அமைந்திருப்பதுடன், அட்டைதாரர்களுக்கு அதிகரித்துச் செல்லும் எரிபொருள் செலவை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X