Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
Diesel & Motor Engineering PLC (DIMO),ரூமஸ்ஸலவில் உள்ள போனவிஸ்டா பவளப்பாறைகளில் காணப்படும் பவளங்களை மீட்டெடுத்து, பாதுகாக்கும் ஒரு முயற்சியான “Life to Reef” செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டத்தை அண்மையில் நிறைவுசெய்தது.இதனூடாக, டிமோ குழுமம் முழுவதிலும் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த தன்னார்வலர்களின் பங்களிப்புடன், மறுசீரமைப்புப்பகுதியை 0.75 ஏக்கர் பரப்பளவால் விஸ்தரித்ததன் மூலம் முந்தைய முறைகள் உள்ளிட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்தப் பிரதேசம் 3.25 ஏக்கராக விரிவடைந்துள்ளது.
1998 வரை, போனவிஸ்டா பவளப்பாறையானது, உயர் உயிரியல் பல்வகைமை கொண்ட பவளப்பாறைகளில் ஒன்றாக அங்கிகரிக்கப்பட்டதுடன், முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு முழுமையான கடல்சார் சூழலாக கருதப்பட்டது. பவளப்பாறைகளின் பரப்பெல்லை கடலின் 1%மட்டுமே என்ற போதிலும், இது 25% கடல் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்கின்றது. மேலும் 1998, 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எல்-நீனோ காரணமாக போனவிஸ்டாவில் காணப்பட்ட 95% உயிருள்ள பவளப்பாறைகள் அழிவடைந்தன.
போனவிஸ்டா பவளப்படிப்பாறைகளின் உயிரியல் பல்வகைமையை அவற்றின் முழுமையான முன்னைய நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், DIMO2017 ஆம் ஆண்டில் வனவிலங்கு மற்றும் பெருங்கடல் வள பாதுகாப்பு (WORC) அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன்பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டமொன்றை ஆரம்பித்தது.கடந்த இரண்டு ஆண்டுகளில், DIMO2 1/2 ஏக்கர் பரப்பளவை, புதிய பவளப்பாறைகளைஅவை எங்கு மிக அவசியமோ, பொருத்தமாக உள்ளதோ அங்கு நடவு செய்து மீட்டெடுத்துள்ளது. 3ஆவது முறையில் நடப்பட்ட 120 குருத்துகள், 2 நாற்று மேடைகள் உள்ளடங்கலாக இதுவரை 1,500க்கும் அதிக குருத்துகள் நடப்பட்டுள்ளதுடன், 04 நாற்றுமேடைகள்மற்றும் 1 உருக்கு இறாக்கை ஆகியன கடலுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன.
DIMO “Life to Reef” திட்டத்தின் நீண்டகால குறிக்கோள், இறுதி நோக்கம், பாறைகளில் உள்ள உயிரியல் பல்வகைமையை மேம்படுத்தி, இதனை வனவிலங்கு திணைக்களம் பாதுகாக்க வேண்டிய பகுதியாக மாற்ற தேவையான சட்டங்களையும் விதிகளையும் செயல்படுத்தும் நிலைக்கு கொண்டு வருவதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025