S.Sekar / 2023 மார்ச் 13 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, XL Axiata உடன் இணைந்து, ‘Futureverse’ இல் நாட்டின் முதல் metaverse பொழுதுபோக்கு அனுபவமான ‘METASTAGE’ ஐ தொகுத்து வழங்கியது. இதில் இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்களான BnS (பாத்தியா மற்றும் சந்துஷ்), உமாரியா மற்றும் இந்தோனேஷியாவின் Vicky Shu (விக்கி ஷு) ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இலங்கை மற்றும் இந்தோனேசியா முழுவதும் உள்ள மெய்நிகர் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த பிரத்தியேக டிக்கெட் நுழைவு நிகழ்வானது futureverse.dialog.lk இணையத்தளத்திற்குச் சென்று நேரடி நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்பை வழங்கியது. Metaverse என்பது ஒரு புதிய மற்றும் உற்சாகமான பொழுதுபோக்கு வழியை வழங்கும் ஒரு மெய்நிகர் உலகமாகும், மற்றும் டயலொக்கின் Futureverse இயங்குதளமானது, பயனர்கள் தங்கள் சொந்த கதாபாத்திரங்களை (அவதாரங்களை) உருவாக்கவும், எல்லையற்ற மெய்நிகர் சூழலில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் வழிவகுக்கின்றது. இலங்கையின் இத்தகைய முதலாவது பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதன் மூலம், இலங்கை டிஜிட்டல் பொழுதுபோக்கு வெளியில் டயலொக் முன்னணியில் உள்ளதுடன் மக்கள் பொழுதுபோக்கை அனுபவிப்பதற்கான புதிய மற்றும் புதுமையான பாதைகளை காணவும் வழி வகுக்கின்றது.
இந்த நிகழ்வின்போது கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதான புத்தாக்குனர் அதிகாரியும் கட்டிடக்கலை நிபுணருமான என்டனி ரொடக்ட் "இலங்கையின் முதல் metaverse பொழுதுபோக்கு அனுபவத்தை Futureverse ஊடே நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அத்தோடு, அனைவரிடமிருந்தும் metaverse க்கு நேர்மறையான கருத்துக்கள் வருவதையறிந்தும் நாங்கள் மிகவும் திருப்தி அடைகின்றோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும், புதுமையான மற்றும் தனித்துவமான அனுபவங்களுடன், பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்துடன் சாத்தியமானவற்றின் எல்லைகளை எட்டும் உந்துதலுடனான இந்த அர்ப்பணிப்பு நிகழ்வானது, நாட்டிலும் பிராந்திய மட்டத்திலும் டிஜிட்டல் துறையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
ஆசிஆட்டா குழும பெர்ஹட், டயலொக் ஆசிஆட்டா மற்றும் XL ஆசிஆட்டா ஆகியன ஆசிஆட்டா டிஜிட்டல் ஆய்வகங்களின் தொழில்நுட்ப ஆதரவுடன், GSMA உள்நுழைவாயிலுடன் இணைந்து metaverse சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியது, இது metaverse இல் அனைத்து வகையான எதிர்கால நிகழ்வுகளையும் எளிதாக பயன்படுத்த வழிவகுத்துள்ளது. உள்நுழைவாயில் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த GSMA தளத்தின் திறன் இன்னும் மேம்படுத்தப்படும். மேலும், எதிர்வரும் சர்வதேச மொபைல் சம்மேளனத்தின் போது இது காட்சிப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago