2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘Dreamers’களை SLT-MOBITEL தெரிவு

S.Sekar   / 2022 நவம்பர் 28 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘Dreamers Wanted Programme’ எனும் நிகழ்ச்சியை SLT-MOBITEL முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சியினூடாக, தூர நோக்குடைய சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், மதிநுட்பமானவர்கள் மற்றும் வழமைக்கு அப்பால் சிந்திப்பவர்கள் ஆகியோரிடமிருந்து, தேசிய சவால்களை வெற்றி கொள்வதற்கு புத்தாக்கமான சிந்தனைகளினூடாக தீர்வுகளை வெளிப்படுத்துமாறு கோரியிருந்தது.

தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் புத்தாக்கமான வகையில் பயன்படுத்துவது தொடர்பில் வெற்றியாளர்கள் கவனம் செலுத்தியிருந்ததுடன், SLT-MOBITEL, இந்த தொழில்முயற்சியாண்மை சிந்தனைகளுக்கு அவர்களின் கனவுகளை நனவாக்கிட ஆதரவளைிக்க முன்வந்துள்ளது.

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளில் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சம்பவங்களை அறிக்கையிடக் கூடிய பொதுக் கட்டமைப்பாக ManKiwwa​ இனால் app ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. SLT-MOBITEL இனால் சந்தைப்படுத்தல் ஊடாக வியாபார அபிவிருத்திச் யெசற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர் சென்றடைவை மேம்படுத்தவும் உதவிகள் வழங்கப்படும்.

நாட்டில் நிலைபேறான தீர்வுகளுக்கான தேவைகளை மீள உறுதி செய்யும் வகையில், Eco-Friendly Bricks திட்டத்தினூடாக, சூழலுக்கு நட்பான, சிவப்பு மண்ணைப் பயன்படுத்தி குறைந்த செலவிலமைந்த கட்டட மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டம் மற்றுமொரு வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. வியாபார விரிவாக்கச் செயற்பாடுகளை உறுதி செய்வது மற்றும் வியாபார அபிவிருத்தி ஆதரவை வழங்குவது போன்றவற்றுக்கு SLT-MOBITEL இனால் உதவிகள் வழங்கப்படும்.

காற்றாலையினால் வலுவூட்டப்பட்ட மோட்டார்களைக் கொண்டு பண்ணைகளுக்கு நீர் இறைக்கும் தீர்வான Water Pumping Windmill திட்டமும் மற்றுமொரு ‘Dreamer’ தீர்வாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் வடிவமைப்பாளர்களை இணைக்கும் செயற்பாடுகளுக்கு SLT-MOBITEL இனால் ஆதரவளிக்கப்படும். சந்தைப்படுத்தல், வர்த்தகநாமமிடல் மற்றும் வாடிக்கையாளர்களை சென்றடைதல் போன்ற வியாபார விருத்திச் செயற்பாடுகளுக்கான ஆதரவும் ஏற்பாடு செய்யப்படும்.

Project Sakura திட்டத்தினால், குறைந்த வருமானமீட்டும் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சகாயமான வலு மாற்றீடுகளை வழங்குவதாக அமைந்திருந்தது. இந்தத் திட்டம் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.  இந்தத் தீர்வில், குறைந்த செலவிலமைந்த ஒளிக் குழாயினால், சூரிய ஒளி கையகப்படுத்தப்பட்டு, மின்சாரத்தை வழங்குவதுடன், சிறிய மின்குமிழ்களுக்கு ஒளியூட்டுவதாக அமைந்துள்ளது. SLT-MOBITEL இனால், வியாபார அபிவிருத்தி மற்றும் நிதி ஆதரவு போன்றன இந்தத் திட்டத்தின் விரிவாக்கத்துக்கு வழங்கப்படும்.

SLT-MOBITEL அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு பல்கலை்கழகங்களின் கல்வி நிபுணர்கள் அடங்கலாக Dreamers Wanted மதிப்பாய்வு அணியினால் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் தூர நோக்குடைய விண்ணப்பங்களை இவர்கள் மீளாய்வு செய்து தெரிவு செய்திருந்தனர்.

SLT-MOBITEL இன் ‘Dreamers Wanted’ திட்டத்தை முன்னெடுப்பதை குழுமத்தின் ஆய்வு மற்றும் விருத்திப் பிரிவான ‘SLT-MOBITEL The Embryo’ மேற்கொண்டிருந்தது. SLT குழுமத்தினுள் காணப்படும் பெறுமதி வாய்ந்த அறிவு மற்றும் திறன்கள் ஆகியவற்றைக் கொண்டு, பன்னாழிகை புத்தாக்க கட்டமைப்பை கட்டியெழுப்புவதாகவும், அதனூடாக தேசத்துக்கு சேவையாற்றுவதில் பங்களிப்பு வழங்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சித் திட்டம் அமைந்துள்ளது. இதற்காக கல்விமான்கள், தொழிற்துறைகள், ஒன்றிணைப்பாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் போன்ற பல தரப்புகளுடன் கைகோர்த்துள்ளது.

பிரதம கூட்டாண்மை மற்றும் புத்தாக்க அதிகாரி பிரபாத் அம்பேகொட கருத்துத் தெரிவிக்கையில், “தொழில்முயற்சியாளர்கள் மற்றும் ஆரம்பநிலையிலுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கு SLT-MOBITEL தம்மை அர்ப்பணித்துள்ளதுடன், ஒருவருக்கொருவர் உதவக்கூடிய வழிமுறைகளை தொடர்ந்து இனங்கண்ட வண்ணமுள்ளது. Dreamers Wanted நிகழ்ச்சியின் வெற்றியாளர்களின் மூலமாக, தேசிய சவால்களை தீர்ப்பதற்கு அவசியமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சரியான பாதையில் நாம் பயணிப்பதை உறுதி செய்யும் சைகை வெளிப்பட்டுள்ளது. எமது Embryo நிகழ்ச்சியுடன், எமது வாடிக்கையாளர்கள், சமூகங்கள் மற்றும் புவி ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் நாம் நேர்த்தியாக உள்ளோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X