Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிரையம்ப் நிறுவனம் அதன் புதிய Ethnic print ரீ-சேர்ட் பிரா தெரிவுகளை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த அறிமுக நிகழ்வில் பெண்கள் சுவை நிரம்பிய வைன்கள், Nail art, ஆச்சரியமூட்டக்கூடிய பரிசுகள் மற்றும் புகைப்பட தருணங்கள் போன்றவற்றை அனுபவித்திருந்தனர். இந்த புதிய தெரிவுகள் கனகச்சிதமான தன்மையையும், யூரோ ஜெர்ஸி துணியின் விசேட வகையினால் உருவாக்கப்பட்டுள்ளதால் மேலதிக சௌகரியத்தையும் வழங்குகிறது.
டிரையம்ப் மொடல்கள் மூலம் வைன்கள் பரிமாறப்பட்டதுடன், வேடிக்கை நிறைந்த விளையாட்டுகளில் பங்குபற்றி பரிசில்களை வெல்லும் அதிர்ஷ்டம் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டிருந்தது. டிரையம்பின் ஆடம்பர வரவேற்பை அனுபவித்த அதேவேளை, மனங்கவரும் நீலநிற ஊதா மற்றும் crimson சிவப்பு நிறந்தினாலான புதிய தெரிவுகள் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்திருந்தது. சௌகரியத்தை விரும்பும் சுதந்திரமான பெண்களுக்கு இந்த நவநாகரீகமான புதிய தெரிவுகள் மிகவும் ஏற்றதாகும்.
டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அமல் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'பெண்ணியம் மற்றும் ஸ்டைல் ஊடாக பெண்களின் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புவதே டிரையம்ப்பின் நோக்கமாகும். இன்றைய நவநாகரீக பெண்களுக்கு இந்த ethnic பிரிண்டட் ரீ-சேர்ட் பிரா வகைகள் அத்தியாவசிய புதிய அம்சமாக அமைந்திருக்கும்' என்றார்.
wired மற்றும் non-wired ஆகவும், மென்மையான கப்கள் மற்றும் அதியுயர் சௌகரியத்தை வழங்கக்கூடிய lycra துணிகளினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரிண்டட் தெரிவுகள் உடலின் வரிகள் தென்படுவதை குறைத்து உங்கள் உடலின் அழகிய தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.
அழகிய உலகிற்கான டிரையம்ப்பின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், எமது பசுமை நிறைந்த உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கிய 'Sensitive Merit' சூழல் நட்புறவான tag இனை கொண்ட இந்த துணிகள் கவர்ச்சிமிக்க புதிய தெரிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அற்புதமான கனகச்சிததன்மை கொண்ட தெரிவுகள் 'புலப்படும் அழகு' மற்றும் 'புலப்படாத பொருத்தம்' போன்றவற்றை குறிக்கிறது. இன்றே இந்த புதிய தெரிவுகளை வாங்கி டிரையம்ப் பெண்கள் மட்டுமே அறிந்த புதுவித நம்பிக்கையை அனுபவித்திடுங்கள்.
39 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
5 hours ago