2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

FAO மற்றும் விவசாய அமைச்சு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

S.Sekar   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நெற்செய்கையாளர்களிலிருந்து பயனாளிகளைத் தெரிவுசெய்து அவர்களுக்கு உரம் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் FAO மற்றும் விவசாய அமைச்சு ஆகியன கைச்சாத்திட்டுள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான FAO பிரதிநிதி விம்லேந்திரா ஷரன், விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்து கொண்டார்.

எதிர்வரும் பயிர்ச்செய்கைப் பருவங்களில் உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காகவும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (FAO), அதன் பங்காளிகளின் உதவியுடன், யூரியா மற்றும் ட்ரிப்பிள் சுப்பர் பொஸ்பேற் (TSP) உர வகைகளைக் கொள்முதல் செய்துள்ளது. அண்மையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், விவசாய அமைச்சின் ஊடாகப் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நெற்செய்கையாளர்களுக்கு அத்தியாவசிய விவசாய உள்ளீடுகளை வழங்குவதற்குமான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X