Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
Millennium IT ESP, இலங்கையின் காப்பீட்டு சேவை வழங்குநரான HNB Assurance (HNBA) நிறுவனத்துக்கு Oracle ERP Cloud தளத்தை நிறுவியிருப்பதாக அண்மையில் அறிவித்துள்ளது. இத்திட்டமானது, 7 வாரங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் பூர்த்திசெய்யப்பட்டதுடன், நாட்டில் மிகவும் விரைவாக Oracle ERP நடைமுறைப்படுத்தியத் திட்டம் என்றப் பதிவையும் இது உருவாக்கியுள்ளது. MillenniumIT ESP ஆல் வழங்கப்பட்ட தீர்வானது, HNBA க்கு தகவல் தொழில்நுட்ப சிக்கலை குறைக்கவும், வணிக செயல்முறை ஒழுங்குபடுத்தவும், தன்னியக்க வணிக செயல்முறையின் ஊடாக பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் வகையிலும், மேம்படுத்தப்பட்ட தகவல்களின் ஊடாக முடிவெடுப்பதை முன்னேற்றவும் உதவும் வகையிலும் அமைந்துள்ளது.
HNBAஇன் நிதி, செலவு மேலாண்மை நடைமுறைகளை நவீனமயமாக்குவதன் ஊடாக கம்பனியை ஆதரிக்கும் பொருட்டும், முன்னோக்கான வணிக செயலிக்கான பாதையாகவும் MillenniumIT ESP இனால் Oracle ERP Cloud தீர்வை வழங்கியுள்ளது. இத்தீர்வால் வழங்கப்பட்ட சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற HNBA விரும்பியதால் பிந்திய க்ளவுட் தொகுதிகள் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது தற்போதுள்ள வணிக செயல்முறைகளை நெறிப்படுத்தவும், எளிமைப்படுத்தவும் உதவியது மட்டுமல்லாது சுறுசுறுப்பு, இயக்கம், சந்தையில் எடுக்கப்படும் நேரத்தை விரைபுபடுத்தவும் உதவியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025