2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

HUTCH வழங்கும் “பேச்சு சுதந்திரம்”

S.Sekar   / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழலை கவனத்தில் கொண்டு, பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் விசேடமான அழைப்புப் பக்கேஜ் ஒன்றை HUTCH அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மாதமொன்றுக்கு ரூ. 67 எனும் தொகைக்கு, Hutch 072/078 வலையமைப்பினுள் அன்லிமிடெட் இலவச அழைப்புகளை வழங்க முன்வந்துள்ளது. இந்தப் பிளானை இரண்டு மாதங்களுக்கு ரூ. 123 மற்றும் மூன்று மாதங்களுக்கு ரூ. 147 ஆகிய கட்டணங்களில் பெற்றுக் கொள்ள முடியும். இதனூடாக பொது மக்களுக்கு பொருளாதார நெருக்கடியான சூழலில், அத்தியாவசிய தொடர்பாடல் செலவுகளில் சேமிப்பை ஏற்படுத்துவதற்காக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு ஆகிய இரு இணைப்புகளுக்கும் இந்த ப்ளான்கள் வழங்கப்படுகின்றன.

இந்த ப்ளான் தொடர்பில் HUTCH பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நெருக்கடியான காலப்பகுதியில் பொது மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் இன்னல்களை நாம் புரிந்து கொண்டுள்ளோம். இலங்கையில் 25 வருடங்களுக்கு மேலான பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், எப்போதும் பொதுமக்களுக்கு சகாயமான மொபைல் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றோம். பொது மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் எமது முயற்சிகளை நாம் முன்னெடுக்கின்றோம். அவர்களின் மொபைல் சேவைகளுக்கான செலவுகளை குறைப்பதனூடாக, சேமிப்பைக் கொண்டு, தமக்குத் தேவையான இதர அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X