Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
COVID-19 நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொடர்ச்சியையும், அணுகலையும்உறுதி செய்யும்வகையில், Hutch தனதுவாடிக்கையாளர்களுக்குரூ.15 ஐ நாளாந்த இலவச நிவாரண ரீலோட்டாக வழங்குகின்றது. இதை சகல வலையமைப்புகளுக்குமான அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்காக உபயோகிக்க முடியும்.
இலங்கை மக்களிடையே COVID-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கடுமையான ஊரடங்குநிலைமையினால், பல சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை ரீலோட்செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கலாம். இந்த இடைக்கால சலுகையானது அனைத்து Hutchமுற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும் தற்போதைய முடக்கல் நிலையில் தொடர்ந்து இணைந்திருக்க உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்கள் Hutch இணைப்பில் தினமும் *288# ஐ டயல் செய்வதன் மூலம் இந்த இலவச நிவாரண ரீலோட்டைப் பெறலாம். இந்த சேவை மார்ச் 26 முதல் 2020 மார்ச் 31 வரை வழங்கப்படுகின்றது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையகத்துடன் (TRCSL) நெருக்கமாக இணைந்து, Hutchநிறுவனம்COVID – 19 வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கு, மக்களை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு பல சரியான மற்றும் கட்டுப்படியாகும் முயற்சிகளை 'வீட்டில் இருந்து வேலை செய்வோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago