2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

INSEE லங்கா புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்

Editorial   / 2026 ஜனவரி 06 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

Siam City Cement (Lanka) Limited (INSEE லங்கா) 2026ஜனவரி 01, முதல் அமுலுக்கு வரும் வகையில் Eng. துசித் C. குணவர்ணசூரியவை அதன் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளது.

தொடர்ந்து தலைவராகப் பணியாற்றவுள்ள நந்தன ஏகநாயகவுக்குப் பிறகு பதவியேற்கும் இவர் தலைமைத்துவ தொடர்ச்சியையும் நிறுவனத்திற்கான மூலோபாய ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்வார்.

Holcim (Lanka) Ltd, LafargeHolcim மற்றும் INSEE என நிறுவனத்தின் பரிணாம வளர்ச்சியின் பயணத்தில் நீண்டகால பங்களிப்பாளராக இருக்கும் துசித், செயல்பாட்டு முன்னேற்றம் மற்றும் மூலோபாய போக்கு ஆகிய இரண்டிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ஜனவரி 2025இல் INSEE லங்காவின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாக மீண்டும் இணைந்த அவர், அபாரமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி உயர்மட்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றுள்ளார். மேலும், EBITDA செயல்திறனை மேம்படுத்தியதுடன் நிறுவனத் திறன் மற்றும் வணிக விளைவுகளை மேம்படுத்தும் திறமை விருத்தி முன்முயற்சிகளை வலுப்படுத்தியுள்ளார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தொழில்துறைகள் மற்றும் பல நாடுகளில் ஆழ்ந்த தலைமைத்துவ அனுபவத்தை கொண்டுள்ள இவர், வணிக மூலோபாயம், செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் விநியோகச் சங்கிலி மாற்றம் ஆகியவற்றில் கொண்டுள்ள நிபுணத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது தொழில்முறை வாழ்க்கையில் Lion Brewery (Ceylon) PLC, Hemas Manufacturing, Fonterra Brands Lanka, GlaxoSmithKline, MAS Active மற்றும் DMS Software Engineering ஆகியவற்றில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

அவர் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச அனுபவத்தை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துசித் கண்டி தர்மராஜா கல்லூரியின் பெருமைமிக்க பழைய மாணவர் என்பதுடன் அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் இலத்திரனியல் பொறியியலில் BSc (Hons) பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும், UK, Coventry பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் நிறுவன உளவியலில் MSc பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், அவர் IMD (சுவிட்சர்லாந்து) மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நிர்வாக தலைமைத்துவ திட்டங்களை பூர்த்தி செய்துள்ளதுடன் IEEE (US), CILT (UK), ISMM (இலங்கை) மற்றும் IESL (இலங்கை) ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார்.

தலைவரின் கூற்று - நந்தன ஏகநாயக்க: "எங்கள் வணிகத்தைப் பற்றிய துஷித்தின் ஆழமான புரிதல், வலுவான செயல்பாட்டு மனநிலை மற்றும் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவம் ஆகியவை INSEE லங்காவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதற்கு அவரை சிறந்த அடுத்த தலைமைத்துவ தெரிவாக ஆக்குகின்றன. INSEEஇலும் ஏனைய பல்வேறு துறைகளிலும் அவர் பெற்றுள்ள அனுபவம், எங்கள் நீண்டகால இலட்சியங்களை நிறைவேற்றவும், நிறுவனத்தை வரையறுக்கும் விழுமியங்களை நிலைநிறுத்தவும் அவரிற்கு சிறந்த பக்கபலமாக இருக்கும்.”

பிரதம நிறைவேற்று அதிகாரியின் கூற்று - துசித் C. குணவர்ணசூரிய

“INSEE லங்கா நிறுவனத்தை வழிநடத்துவதில் நான் பெருமைப்படுவதுடன் என் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். INSEE எப்போதும் நிறுவனம் என்பதை தாண்டி பகிரப்பட்ட விழுமியங்கள், உறுதி மற்றும் தேசத்தை பொறுப்புடன் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு குடும்பமாகும். எங்கள் செயல்பாட்டு சிறப்பை வலுப்படுத்தி, புதுமைகளை தழுவி, நிலையான வளர்ச்சி நோக்கிய ஒன்றிணைந்த பயணத்தில் ​​எங்கள் குழுக்கள், வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலாக உள்ளேன். ”

தனது பரந்த நிபுணத்துவம், நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவு மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தலைமைத்துவ அணுகுமுறையுடன் துசித், INSEE லங்காவை அதன் செயல்திறன் சிறப்பம்சம், புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்திற்கு வழிநடத்த திடமாக உள்ளார். அவர் இப் பொறுப்பை ஏற்கும் வேளையில் INSEE லங்கா குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .