Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நீர் முகாமைத்துவ தொகுதிகள் மற்றும் தீர்வுகளை வழங்கும் Jinasena (Pvt) Limited, நாட்டிலுள்ள மிகவும் அதிநவீன, எரிசக்தி வினைதிறன் நீர்ப்பம்பி சாதனமான CJ SMART எனும் புதிய தலைமுறை வீட்டுப்பாவனை நீர்ப்பம்பிகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.
மகத்தான அளவில் எரிசக்தி வினைதிறனைப் பேணும் முயற்சிகள் மீது உலகின் கவனம் திரும்பியுள்ள நிலையில், தூய்மையான, எரிசக்தி செயற்றிறன் கொண்ட உற்பத்திகள் மூலமாக அதிக நிலைபேறு கொண்ட, பசுமையான எதிர்காலத்தைத் தழுவிக் கொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற முன்னெடுப்புக்களுக்கு நிறுவனங்கள் உதவ வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
110 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புத்தாக்க மற்றும் பொறியியல் தலைசிறப்புடனான ஒரு முன்னோடி நிறுவனம் என்ற வகையில், துiயௌநயெ நிறுவனம் மேற்குறிப்பிட்ட சவாலைக் கையிலெடுத்துள்ளது. அந்த வகையில் IE1மோட்டார், தனித்துவமான தூண்டுதல் வடிவமைப்பின் துணையுடன், கணிசமான அளவில் உயர் மட்ட எரிசக்தி செயற்றிறனுக்கான உத்தரவாதத்தை அளிக்கின்ற வகையில் இலங்கையின் முதன்முதல் IE1 தரத்திலான வீட்டுப் பாவனை நீர்ப்பம்பியினை அது தயாரித்துள்ளது.
உயர் செயல்திறன் கொண்ட தூண்டல் செயலி (impeller) சந்தையில் காணப்படும் ஏனைய தூண்டல் செயலிகளை விஞ்சும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதாவது Jinasenaவின் புதிய தலைமுறை நீர்ப்பம்புகள் எரிசக்தி வினைதிறன் தொடர்பில் அரசாங்கத்தால் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை விடவும் மேம்பட்டதாக அமைந்துள்ளதுடன், இலங்கையில் வீட்டுப் பாவனை நீர்ப்பம்பிகளுக்கான புதிய தர ஒப்பீட்டு நியமமாகவும் மாறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025