Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 10 , மு.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி கேபல்ஸ் பிஎல்சி ‘Kelani Masking Painter’s Tape’ வகையை அண்மையில் சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோருக்கு இந்தத் தயாரிப்பு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. மெருகேற்றப்பட்ட தங்கியிருக்கக்கூடிய தயாரிப்பொன்றை புகழ்பெற்ற நிறுவனமொன்றிடமிருந்து பாவனையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்தத் தயாரிப்பில் இரு விசேடத்துவங்கள் காணப்படுகின்றன. ‘Kelani Masking Painter’s Tape’ இல் காணப்படும் பசை ஏற்கெனவே பெயின்ட் பூசப்பட்ட மேற்பரப்புகளில் ஒட்டி அகற்றும் போது, அவற்றில் ஒட்டிப்பிடிக்கும் தன்மை அற்றதாக அமைந்திருக்கும். புதிதாகப் பெயின்ட் செய்யப்பட்ட மேற்பரப்புக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.
எனவே, பெயின்ட் பூச்சுகளில் ஈடுபடுவோரின் தொழிலை இலகுவாக்கும் வகையில் அமைந்திருக்கும். மேலும், வாகனங்களுக்கு பெயின்ட் பூச்சுகளில் ஈடுபடுவோருக்கும் சிறந்த பெயின்ட் பூச்சு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு வாய்ப்பை வழங்குவதாக அமைந்திருக்கும்.
‘Kelani Masking Painter’s Tapes’ ஓர் அங்குலம் மற்றும் இரண்டு அங்குலம் ஆகிய அளவுகளில் அவை அமைந்துள்ளன. இவற்றின் நீளம் 14 மீற்றர்கள் முதல் 40 மீற்றர்கள் வரை அமைந்துள்ளன. (1x14, 1x28, 2x14, 1x40)
களனி கேபல்ஸ் பிஎல்சியின் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க இந்தத் தயாரிப்பின் அறிமுக நிகழ்வில் உரையாற்றும் போது, “Masking டேப்கள் பற்றி, சந்தை ஆய்வுகளை முன்னெடுத்திருந்த போது, உயர் தரம் வாய்ந்த தயாரிப்பொன்றுக்கான தேவை சந்தையில் காணப்பட்டதை இனங்கண்டோம். எனவே, ‘Kelani Masking Painter’s Tape’ ஐ தயாரித்து, பெயின்ட் பூச்சில் ஈடுவோரின் தேவையை நிவர்த்தி செய்யத் தீர்மானித்தோம். பெயின்ட் பூச்சு செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவருக்கும் ‘Kelani Masking Painter’s Tape’ ஐ பரிந்துரைக்கிறோம். இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்தி, மாற்றத்தை உணருமாறு அழைக்கிறோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025