Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
Ceylon Biscuits Limited (CBL) நிறுவனத்தின் குழும நிறுவனங்களில் ஒன்றான Convenience Foods (Lanka) PLC இன் பிரதான சோயா வர்த்தக நாமமாகவும் உள்நாட்டு சோயா உற்பத்திச் சந்தையில் ஒரு புத்தாக்கமான வரவாகவும் மாறியுள்ள ‘Lankasoy Kirimalu’ அண்மையில் இடம்பெற்ற SLIM Brand Excellence Awards 2019 விருதுகள் நிகழ்வில் ‘ஆண்டின் மிகச் சிறந்த புதிய வரவு’ என்ற பிரிவில் தங்க விருதை வென்றுள்ளது. Lankasoy இன் ஒரு உப வர்த்தக நாமமான “Kirimalu” ஆனது வீட்டில் தயாரிக்கப்படும் அரிய கலவையான வெள்ளை மீன் கறிச் சுவையுடன் வெளிவந்துள்ளதுடன், மிகவும் குறுகிய காலப்பகுதியில் பாரிய எண்ணிக்கையான நுகர்வோரின் அபிமானத்தை வென்றுள்ளது.
இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலையத்தால் (Sri Lanka Institute of Marketing - SLIM) ஏற்பாடு செய்யப்பட்ட SLIM Brand Excellence Awards 2019 விருதுகள் நிகழ்வானது தொடர்ந்து 18ஆவது ஆண்டாகவும் நடாத்தப்பட்டுள்ளதுடன், Catapult Your Brand என்பதே இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருளாகும். இலங்கையில் வர்த்தகநாம வெற்றியின் சிகரமாக இனங்காணப்பட்டுள்ள SLIM Brand Excellence Awards விருதுகள் நிகழ்வானது, உள்நாட்டு வர்த்தக நாமங்களை சர்வதேச தராதரங்களுக்கு மேம்படுத்தி, பெறுமதிமிக்க இனங்காணல் அங்கிகாரத்தைக் கிடைக்கச்செய்யும் நோக்குடன், உள்நாட்டு, சர்வதேச வர்த்தகநாமங்களின் அங்கிகாரத்தை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago
7 hours ago
9 hours ago