Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 28 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய அபிவிருத்தி வங்கி 2016ஆம் நிதியாண்டின் செயற்பாடுகள் குறித்து அறிவிக்கும் நோக்குடன் “முதலீட்டாளர் கருத்துக்களம்” மாநாட்டை அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கருத்தரங்கில் ஏராளமான முதலீட்டாளர்கள், முதலீட்டு ஆலோசகர்கள், பங்குத்தரகர்கள், நிதிய முகாமையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கலந்துகொண்டிருந்தனர். இவர்களுக்கு NDB குழுமத்தின் செயற்பாடுடகள் குறித்து அறியத்தரப்பட்டதுடன், எதிர்காலத்துக்கான மூலோபாயங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறியத்தரப்பட்டது.
இந்நிகழ்வானது, NDB தலைவர் ஆனந்த அத்துக்கோரள, NDB பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திமந்த செனவிரட்ண, NDB குழும பிரதம நிதி அதிகாரி ஃபைசான் ஒஸ்மான் மற்றும் NDB கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி வஜிர குலத்திலக ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த NDB பிரதம நிறைவேற்று அதிகாரி திமந்த செனவிரட்ண NDBஇன் முதன்மை சக்தியினை தமது பேச்சில் பிரதிபலித்தார். “அபிவிருத்தி நோக்கிலான வர்த்தக வங்கியியல்” போன்ற தனித்துவமிக்க வர்த்தக கருத்தாக்கம் எவ்வாறு சில்லறை வர்த்தக மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக பரப்பிற்குள் இயல்பாக நுழைகின்றது என்பது குறித்தும், மூலதன முதலீட்டு சந்தை தலைமைத்துவ இடத்துடன், வங்கியியல் கூட்டுத்தொகுதியானது, குறுக்கு விற்பனை வாய்ப்புகளில் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. தரமான சொத்து அடித்தளம், உயர் பயிற்சிபெற்ற பணியாளர்கள் மற்றும் கடந்தகாலத்தில் பெற்றுக்கொண்ட பாடங்கள் ஆகியன, வாய்ப்புகளை பற்றிக்கொண்டவாறு, வங்கியினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கான உத்வேகமளிக்கும் காரணிகளாக விளங்குகின்றன.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago