2025 மே 19, திங்கட்கிழமை

ODELஇன் Luv SL அலுமினிய மீள்சுழற்சி திட்டத்துக்கு அங்கிகாரம்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ODEL PLC யின் Luv SL புத்தாக்க அலுமினிய மீள்சுழற்சி முயற்சிக்கு Melting Point சான்றிதழை மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த அலுமினியக் கழிவுகள் தனது நீடித்த அளவிலான ஆற்றலினால் நிலப்பரப்புகளை நெரிசலாக்கி, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. ODEL PLC இன் Luv SL மூலம் இவை மீள்சுழற்சி செய்யப்பட்டு நகைகள், வீட்டு பொருட்கள், ஆபரணங்கள் போன்றன தயாரிக்கப்படுகின்றன. 

Luv SL பயன்படுத்திய அலுமினியக் கேன்களை மொத்தமாக சேகரிக்கிறது. அவற்றை உருக்கி, பின்னர் கவர்ச்சிகரமான தயாரிப்புகளாக மாற்றி, அத்தயாரிப்புக்களை வாடிக்கையாளர்களுக்கு தங்கள் விற்பனை நிலையங்களின் மூலம் கிடைக்கப்பெறச் செய்கின்றது.

அலுமினியம் புவியோட்டில் உள்ள மூலகங்களில் மூன்றாவது மிக அதிகமான பெறப்படும் உலோக உற்பத்தியாகும் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் இது கணிசமாக பங்களிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X