Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அஸ்ஹர் இப்றாஹிம்)
இங்கிலாந்தின் பட்டயக் கணக்காளரும், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் நிதி முகாமைத்துவத்தில் முது நிலை பட்டமும் பெற்றுக் கொண்ட றொஸ்லின் அஹமட் நிஸார், தனது 20வது வயதில் PWC நிறுவனத்தில் நிதித்துறை ஆலோசகராக நியமனம் பெற்றார். இவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவராவார்.
2021 மே மாதத்தில் இருந்து சிரேஷ்ட நிதித்துறை ஆலோசகராக தரமுயர்த்தப்பட்டார். இவரது திறமையை அடையாளம் கண்ட PWC நிறுவனம் இவரை இந்த நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிற்கு சிபார்சு செய்தது.
அவுஸ்திரேலியா முழுவதும் PWC நிறுவனத்தில் பணிபுரிகின்ற 10,000 பேர் கொண்ட அணியில் 10 பேர் மட்டுமே இதற்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இதில் றொஸ்லி அஹமட் நிஸார் தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் தனிப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு சிட்னி மகாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டார்.
மிக விரைவில் தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் PWC நிறுவனத்தின் முகாமையாளர்களுள் ஒருவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
PWC நிறுவனம் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்டு 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது. இது உலகின் முதற்தர நிதி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர் அக்கரைப்பற்று அஸ் ஸிராஜ் மகா வித்தியாலய பழைய மாணவரும், அக்கரைப்பற்று நூராணியா பள்ளிவாசலில் மார்க்க கல்வி பயின்று திருக் குர் ஆனின் பெரும் பகுதியை மனனம் செய்தவருமாவார்.
றொஸ்லி அஹமட் நிஸார் , சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்றை வதிவிடமாகவும் கொண்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றும் றஸீட் ஏ நிஸார், றிஸானா தம்பதிகளின் புதல்வருமாகும்.
4 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago