Freelancer / 2025 ஜூன் 20 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் நாளாந்தம் வெனிஸ் நகரில் கண்விழித்தால் எப்படி இருக்கும்? அந்த அனுபவத்தை இனி நீங்கள் இலங்கையிலும் பெற்றுக் கொள்ளலாம்.
Prime Group அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது நீர் விலா தொனிப்பொருளில் அமைந்த சேவையளிக்கப்பட்ட தொடர்மனைத் தொகுதியான Venezia, நீர்கொழும்பு களப்பு பகுதியில் சிறந்த காட்சியமைப்புகளுடன் நிறுவப்படுகிறது. வெனிஸ் நகரின் அழகையும், அம்சங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தத் தொடர்மனை விலாத் தொகுதி, இலங்கையின் நவீன வசிப்பிட சௌகரியத்துக்கு, வெனிஸின் அலங்கார அம்சங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
Venezia இல் நீங்கள் தொடர்மனை ஒன்றின் உரிமையாளராவது மட்டுமன்றி, புதிய வாழ்க்கை முறைக்கு வழிகோலும் புதுவித அனுபவமாகவும் அமைந்திருக்கும்.
Prime Group இன் பிரத்தியேகமான தரம் மற்றும் சிறப்பைக் கொண்ட Venezia, ஒரு வசிப்பிடம் மட்டுமன்றி, வாழ்நாள் அனுபவத்தைப் பெற வேண்டிய பகுதியாகவும் அமைந்துள்ளது. கனவு கொண்டோலா சவாரிகள் முதல் infinity lagoon pool மற்றும் மிதக்கும் படகுகள், சிறுவர் விளையாட்டு பகுதிகள் மற்றும் sunken-lounge lagoon bar போன்ற அம்சங்கள் சொகுசான அனுபவத்தை உறுதி செய்யும். இலங்கையின் முதலாவது நீர் சினிமா திரையரங்கு, ஒவ்வொரு தொடர்மனையிலும் private jacuzzis மற்றும் பிரத்தியேகமான aquatic party venue போன்றவற்றுடன், Venezia இல் வாழ்க்கை என்பது கொண்டாட்டங்கள் நிறைந்ததாகவும், பரிபூரணமானதாகவும் அமைந்திருக்கும்.
Prime Group பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரன்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “Venezia என்பது ஒரு நிர்மாணத் திட்டத்துக்கு அப்பாற்பட்டது. இலங்கையின் ரியல் எஸ்டேட் எந்தளவு வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் அதன் எதிர்காலத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. எதிர்பார்க்கப்படும் வாடகை 12% இனாலும், முதலீட்டு தொகை 80% இனாலும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தினூடாக புதிய வாழ்க்கைமுறை மற்றும் மதிநுட்பமான முதலீடு போன்றன வழங்கப்படும். வெனிஸை மையமாகக் கொண்ட வடிவமைப்புடன், களப்பை முகப்பாக கொண்ட அமைவிடம் போன்றவற்றினூடாக, Venezia அழகு, சௌகரியம் மற்றும் பெறுமதி நிறைந்ததாக அமையும். நீர்கொழும்பு நகரில் சர்வதேச ரீதியில் கீர்த்திநாமம் பெறும் வதிவிடப்பகுதியின் உரிமையாளராகத் திகழ்வது என்பது அரிய வாய்ப்பாகும்.” என்றார்.
இந்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் ஒரு ஆரோக்கிய சரணாலயமும், இத்தாலிய, ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு உணவு வகைகளை வழங்கும் ஒரு தனித்துவமான உணவகமாகவும் அடங்கியிருக்கும். பிரத்தியேக பட்லர் சேவை மற்றும் Prime Group நிபுணத்துவத்துடன் நிர்வகிக்கப்படும் தொழில்முறை வீட்டு பராமரிப்பு போன்ற பிரீமியம் வசதிகள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, நீர்கொழும்பு கடற்கரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம், முன்னணி பாடசாலைகள், வைத்தியசாலைகள், சுப்பர் மார்க்கெட்கள் மற்றும் பல முக்கிய பகுதிகளை அண்மித்து Venezia அமையவுள்ளது.
சூரிய அஸ்தமன நடைபயணம் முதல் மகிழ்ச்சிகரமான resort-style வசதிகள் வரை, Venezia அன்றாட தருணங்களை மாயாஜாலமாக மாற்றுகிறது. உங்களின் முதலீடு, இடம்பெயர்வு அல்லது மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிப்பது என எதுவாக இருந்தாலும், இந்த வீடு ஒவ்வொரு நாளும் விடுமுறை போல உணர வைக்கும்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026