2025 மே 07, புதன்கிழமை

SLT-MOBITEL IDD உடன் தடங்கலில்லாத உயர்தர சர்வதேச அழைப்பு சேவை

S.Sekar   / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT Home வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த தடங்கலில்லாத சர்வதேச நேரடி அழைப்பு சேவையை தெளிவான குரல் வசதியுடன் வழங்குவதாக SLT-MOBITEL அறிவித்துள்ளது. இதன் மூலமாக, வெளிநாட்டிலுள்ள தமது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் தேவையான போது உரையாடுவதற்கான வசதியை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சகல SLT Home வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளிலும் IDD (International Direct Dialling) வசதி செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், தெளிவான குரல் தரம் மற்றும் தடங்கலில்லாத சேவையை வழங்கப்படுவதாக SLT-MOBITEL வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SLT-MOBITEL இனால் போட்டிகரமான விலையில் IDD கட்டணங்கள் சகல நாடுகளுக்கும் வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது தேவைக்கமைய, ‘Per Second’ அல்லது 'Per minute" எனும் அடிப்படையிலான கட்டண முறையை தெரிவு செய்யும் வசதி வழங்கப்படுகின்றது. மேலும், பெறுமதி வாய்ந்த வியாபார அழைப்புகளை முன்னெடுப்பது முதல், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு விசேட நிகழ்வுகளின் போது தொடர்பு கொள்வது வரையில், SLT- MOBITEL வாடிக்கையாளர்களுக்கு தற்போது உயர் தரம் வாய்ந்த தெளிவான அழைப்புகளை தமது சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளும் தேவைக்காக மேற்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தரம் மற்றும் எளிமையான தேவைகளை நிவர்த்தி செய்யும் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வதற்கு சிறந்த தொடர்பாடல் முறையாக SLT IDD அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X