2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

SLT-MOBITEL இனால் SLIoT Challenge மற்றும் IESL Robogames போட்டிகள் ஏற்பாடு

S.Sekar   / 2023 ஏப்ரல் 03 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாக்கமான மனநிலையைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு வழங்கும் வகையில், SLT-MOBITEL இன் வலுவூட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘SLIoT Challenge 2022’ மற்றும் ‘IESL Robogames 2022’ ஆகியன அண்மையில் இடம்பெற்றன.

SLIoT Challenge 2022 இல் பட்டம்பயிலுனர்கள் பிரிவில் 1ஆம் இடத்தை Metatron, 2ஆம் இடத்தை JuRu மற்றும் 3ஆம் இடத்தை ஆகியன Strydo Labs பெற்றுக் கொண்டன. திறந்த பிரிவில், வெற்றியாளராக Achievers தெரிவாகியிருந்ததுடன், 2ஆம் இடத்தை UpThrust மற்றும் 3ஆம் இடத்தை Indika ஆகிய அணிகள் பெற்றுக் கொண்டன.

IESL Robogames 2022 போட்டியின் பாடசாலைகள் பிரிவில் 1ஆம் இடத்தை Ralphy Boy, 2ஆம் இடத்தை Kada Ozaki மற்றும் 3ஆம் இடத்தை Mavericks ஆகியன பெற்றுக் கொண்டதுடன், பட்டம்பயிலுனர்கள் பிரிவில் வெற்றியாளராக Trix, 2ஆம் இடத்தை Botivity மற்றும் 3ஆம் இடத்தை Terminator ஆகிய அணிகள் பெற்றுக் கொண்டன.

இந்நிகழ்வில் Institute of Engineers Sri Lanka (IESL) மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் அங்கத்தவர்கள் பிரசன்னமாகியிருந்ததுடன், இலங்கையின் திறமையான புத்தாக்க சிந்தனையாளர்களுக்கு மற்றும் எதிர்கால பொறியியலாளர்களுக்கு வாழ்த்துக்ளையும் தெரிவித்தனர். இதில், IESL பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் நீல் அபேசேகர, IESL தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணனி பிரிவு கழக தவிசாளர் பொறியியலாளர் ஷஹீட் முஸ்தாலி, IESL தெரிவு செய்யப்பட்ட தலைவர் பேராசிரியர். ரஞ்சித் திசாநாயக்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான பேராசிரியர். சந்தன கமகே, கலாநிதி. குட்டில குணசேகர, கலாநிதி. சுலோச்சன சூரியாரச்சி மற்றும் கலாநிதி. உதய சங்கர் தயாசிவம் ஆகியோருடன், SLT-MOBITEL குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பொறியியலாளர் பிரபாத் தஹநாயக்க மற்றும் SLT-MOBITEL இன் சிரேஷ்ட நிர்வாகத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளை முன்னெடுத்திருந்ததனூடாக, இளைஞர்கள் மத்தியில் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களின் திறமைகள் மற்றும் தொழில்முயற்சியாண்மை திறன்களை கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .