S.Sekar / 2021 நவம்பர் 17 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளுக்கு பேருந்து நூலகங்களை அன்பளிப்புச் செய்யும் திட்டத்தின் மற்றுமொரு அங்கமாக, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பேருந்து நூலகமொன்றை, கலேவெல, வல்கம்வெவ வித்தியாலயத்துக்கு SLT-MOBITEL அன்பளிப்பு செய்திருந்தது. இந்த கையளிக்கும் நிகழ்வில் SLT-MOBITEL இன் அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பாடசாலையின் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

பாடசாலை பேருந்து நூலக செயற்திட்டத்தின் மூலமாக, நாட்டின் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்க SLT-MOBITEL எதிர்பார்ப்பதுடன், அவசியமான தகவல் தொழில்நுட்ப வசதி, புத்தகங்கள் போன்றவற்றை வழங்கி, கிராமிய பாடசாலைகளின் இளம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க எதிர்பார்க்கின்றது. இலங்கை தேசிய நூலகம், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் மனுசத் தெரண ஆகியன இணைந்து இந்த தேசிய சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுக்கின்றன.
8 minute ago
11 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
29 minute ago
36 minute ago