2025 மே 07, புதன்கிழமை

SLT-MOBITEL இன் 4G Router வீட்டு விநியோக சேவை அறிமுகம்

S.Sekar   / 2022 செப்டெம்பர் 23 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, தனது 4G Router வீட்டு விநியோக சேவையை அறிமுகம் செய்துள்ளது. 4G router களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களின் இருப்பிடப் பகுதிகளுக்கு இலவசமாக விநியோகிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு விற்பனையகமொன்றுக்கு நேரடியாக விஜயம் செய்யாமல், தமது வீடுகளில் சௌகரியமாக இருந்த வண்ணம் வாடிக்கையாளர்களுக்கு சாதனங்களை கொள்வனவு செய்யும் வசதியை SLT-MOBITEL அறிமுகம் செய்துள்ளது.

 SLT-MOBITEL இன் பரந்த வாடிக்கையாளர் மையப்படுத்திய சேவை மேம்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உரிய காலப்பகுதியில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது போன்ற பரந்த கொள்கையின் அங்கமாகவும், தேசிய ரீதியில் நிலவும் தினசரி பயணங்களை முன்னெடுப்பதில் காணப்படும் சவால்கள் நிறைந்த சூழ்நிலையை சீராக்கிக் கொள்வதற்கும் இந்த 4G Router வீட்டு விநியோக சேவை அமைந்துள்ளது.

SLT-MOBITEL 4G router விநியோக சேவையினூடாக, mAgent மூலம் தமது இருப்பிடத்தில் இந்த தயாரிப்பைப் பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் 1717 உடன் தொடர்பு கொண்டு அல்லது நிறுவனத்தின் இணையத்தளத்தில் பிரவேசித்து தமது விவரங்களை பதிந்து ஓடரை மேற்கொள்ளலாம். SLT-MOBITEL இனால் Home 4G Router உடன் இணைப்பு வாடிக்கையாளர் இருப்பிடத்துக்கு வழங்கப்படும். விநியோகக் கட்டணம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

SLT-MOBITEL இனால் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான முறையில் தமது தேவையான தளங்களை அணுகும் வாய்ப்பு புத்தாக்கமான வழிமுறைகளில் வழங்கப்படுகின்றன. மேலும், வீட்டு வாயிலுக்கான விநியோகத்தின் உள்ளடக்கப்பட்ட மேலதிக சேவையாக, வாடிக்கையாளர்களுக்கு தற்போது புதிய மொபைல் இணைப்புகள் மற்றும் SIM மாற்றீடுகள் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X