2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

SLT-MOBITEL’இன் eChannelling இனால் Medicare 2023 கண்காட்சிக்கு அனுசரணை

S.Sekar   / 2023 மே 06 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

eChannelling இனால், அண்மையில் இடம்பெற்ற சுகாதாரப் பராமரிப்பு கண்காட்சியான Medicare 2023 நிகழ்வுக்கு அனுசரணை வழங்கப்பட்டிருந்தது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) அண்மையில் இடம்பெற்ற இந்த கண்காட்சியில் B2C மற்றும் B2B பிரிவுகளைச் சேர்ந்த பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர். வியாபாரம் மற்றும் டிஜிட்டல் வாழ்க்கைமுறை சேவைகளில் eChannelling இன் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

இலங்கையில் டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பிரவேசித்திருந்த முதலாவது மென்பொருள் வடிவமைப்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநர் எனும் வகையில், கடந்த காலங்களில் eChannelling இனால், புத்தாக்கமான தீர்வுகள் வழங்கப்பட்டு, சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும், அதிகளவு கவனத்தை ஈர்த்திருந்த Mindrone தொழில்நுட்பத்தினூடாக, ட்ரோன் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட தனிநபர்களில் உறுதித்தன்மை பகுப்பாய்வு மற்றும் அழுத்த முகாமைத்துவத்தை குறைத்துக் கொள்ளல் போன்றவற்றில் தொழில்நுட்பத்தினால் எவ்வாறு பங்களிப்பு வழங்கப்படலாம் என்பது விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென மற்றும் இதர விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கண்காட்சியுடன் கைகோர்த்து, eChannelling இனால், உள்நாட்டு மற்றும் சர்வதேச வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்களுடனான உறவுகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டிருந்ததுடன், டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தனது ஆழமான அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தது.

இலங்கை சுகாதார அமைப்பு மற்றும் விசேட வைத்திய சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாட்டுக் குழுவினால் Medicare 2023 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் பொது மக்கள் மத்தியில் சரியான சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு இது அமைந்திருந்தது. நவீன சுகாதாரப் பராமரிப்பு, நோய் தவிர்ப்பு, வினைத்திறனான சிகிச்சை முறைகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் இலங்கையின் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களில் காணப்படும் பிந்திய சேவைகள் மற்றும் சர்வதேச மருத்துவத் துறையில் காணப்படும் பிந்திய தொழில்நுட்பங்கள் போனற்வற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது.

ஸ்தாபிக்கப்பட்டது முதல், இலங்கையின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் eChanneling பங்களிபபு வழங்கியிருந்தது. பொது மக்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் வழங்குநர்கள் மத்தியில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்து, டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை மேம்படுத்தி, பாவனையாளருக்கு நட்பான முறையில் வினைத்திறனான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தியிருந்தது. இந்தப் பிரிவில் கடந்த 2 தசாப்த காலமாக நிறுவனம் பேணி வரும் ஆதிக்கத்தினூடாக, பெருமளவு சந்தைப் பங்கை தன்வசம் கொண்டிருப்பதுடன், இலங்கையின் முன்னணி சுகாதாரப் பராமரிப்பு மற்றும் டிஜிட்டல் வாழ்க்கைமுறை சேவைகளை புதிய மட்டத்தில் பெற்றுக் கொடுப்பதில் முன்னிலையில் திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .