2024 மே 20, திங்கட்கிழமை

SLT-MOBITEL’இன் mCash க்கு கௌரவிப்பு

Freelancer   / 2023 ஜூன் 12 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL இன் mCash சேவைக்கு இலங்கையின் மிகச்சிறந்த புத்தாக்க டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆசிய Fintech கல்வியகத்தினால் (AFTA) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. வியாபாரங்கள் மற்றும் விற்பனைகள் துறைக்கு நவீன டிஜிட்டல் கொடுப்பனவுகள் தீர்வுகளினூடாக பலன்களை அனுபவிக்கக்கூடிய வகையில், இலங்கையின் டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் திரட்டல்கள் பிரிவில் mCash இன் சிறந்த பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்திருந்தது.

 

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் ஆனந்த ஜயலத், மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் கலாநிதி. டி. குமாரதுங்க PhD, இலங்கை Fintech சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. திஸ்ஸ ஜயவீர PhD, FASL தலைவர் ராஜ்குமார் கனகசிங்கம் மற்றும் ஜோசப் ஜோஷி (இந்தியாவின் சர்வதேச நிதிச் சேவைகள் நிலைய அதிகார சபை (IFSCA) பிரதம தகவல் அதிகாரி) ஆகியோருடன், இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தொலைத்தொடர்பாடல் நிறுவனங்கள் மற்றும் fintech நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

இலங்கையின் முன்னணி மொபைல் நிதிச் சேவைகளை வழங்குநர் எனும் வகையில், mCash தொடர்ந்தும் திரட்டல் முகாமைத்துவ பிரிவில் குறிப்பிடத்தக்களவு வெற்றியை பதிவு செய்த வண்ணமுள்ளது. வருமானத்தைப் பொறுத்தமட்டில், வளர்ந்து வரும் வாடிக்கையாளர் இருப்பு மற்றும் mCash செயற்படுத்தப்பட்ட வலையமைப்பு போன்றவற்றுடன் வியாபாரங்கள் ஒப்பற்ற வளர்ச்சியை பதிவு செய்த வண்ணமுள்ளன. வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபார பங்காளர்களுக்கு தொழிற்துறையில் முன்னணி சேவைகளை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதி செய்வதில் உறுதியான வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் திரட்டல்களை நாடு முழுவதிலும் மேற்கொள்வதில் mCash இன் முயற்சிகளினூடாக ஊக்குவிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றமை இந்த கௌரவிப்பினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ஆசிய டிஜிட்டல் நிதியியல் விருதுகளை, சில நிதியியல், FinTech மற்றும் blockchain நிறுவனங்களுடன் இணைந்து ஆசிய FinTech கல்வியகம் வழங்குகின்றது. அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த சர்வதேச நியமச் சபையின் (IBS) அங்கம் பெறும் அமைப்பாக AFTA திகழ்கின்றது. உலகளாவிய ரீதியில் 40 க்கும் அதிகமான நிறுவனங்களில் இயங்கும் சான்றளிக்கும் அமைப்பாக திகழ்கின்றது. Global Academy of Finance and Management (GAFM)இனால் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் வர்த்தகச்சின்னங்களின் உரிமையாண்மையை IBS கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X