2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

SLT-MOBITEL இன் வருடாந்த நிதி அறிக்கை 2021க்கு SAFA விருது

S.Sekar   / 2023 ஜனவரி 13 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதி அறிக்கைக்கு, தெற்காசிய கணக்காளர் சம்மேளனத்தின் (SAFA) விருதுகள் வழங்கும் நிகழ்வில், தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டில் சிறந்த வெளிப்படுத்தல்களைக் கொண்ட வருடாந்த நிதி அறிக்கைகள், ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் மற்றும் கூட்டாண்மை வெளிப்படுத்தல்களுக்கான SAARC வருடபூர்த்தி விருதுகள் போன்றவற்றுக்காக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேபாளத்தின், காத்மண்டு நகரில் இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், “தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை” என்பதில் தங்க விருதை ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் வருடாந்த நிதி அறிக்கை பெற்றுக் கொண்டது. சர்வதேச வரி விதிப்பு மற்றும் டிஜிட்டல் நாணயம் 2022 என்பதன் அங்கமாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி மற்றும் நிதியியல் கணக்கீடுகள் மற்றும் வரிக் கையாளல்கள் பொது முகாமையாளர் இந்திரஜித் பிரியந்த ஆகியோர் SLT-MOBITEL சார்பாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

‘No Dream too Big’எனும் தொனிப்பொருளுக்கமைய SLT-MOBITEL இன் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதி அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்ததுடன், தொழில்நுட்ப புரட்சியை ஊக்குவிப்பது தொடர்பில் நிறுவனத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் டிஜிட்டல் மாற்றியமைப்புக்கு தூண்டுகோளாகவும் வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

SAFA விருதை வெற்றியீட்டியிருந்தமையானது, SLT-MOBITEL இன் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதி அறிக்கை கடந்த ஆண்டு முழுவதிலும் பெற்றுக் கொண்ட கௌரவிப்புகளுக்கு மேலும் அர்த்தம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X