Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 மே 24 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
CBL Nutriline, 123வது SSC டெனிஸ் திறந்த சம்பியன்ஷிப் போட்டியில் ஊட்டச்சத்துப் பங்காளராக கைகோர்த்து அனுசரணை வழங்கியிருந்தது.
அண்மையில் பூர்த்தியடைந்த இந்த சுற்றுப்போட்டியில் 800ற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தனர். 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதலாவது பாரிய சம்பியன்ஷிப் போட்டியாக இது அமைந்திருந்தது. SSC இன் டெனிஸ் ஹவுஸ் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுற்றுப்போட்டி ஸ்ரீ லங்கா டெனிஸ் சம்மேளனத்தின் கண்காணிப்பின் கீழ் சிங்களீஸ் ஸ்போட்ஸ் க்ளப் (SSC) டெனிஸ் மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
ஊட்டச்சத்து மிக்க காலை உணவின் மதிப்பை வென்ற CBL Nutriline இந்த வருடத்தின் சுற்றுப்போட்டியில் ஊட்டச்சத்துப் பங்காளராக இணைந்ததையிட்டு பெருமை கொள்கிறது. ஆரோக்கியமான தானியங்களின் சிறந்த சுவையினால் நன்கு அறியப்பட்ட CBL Nutriline, வளர்ந்து வரும் குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவைக்கு உள்நாட்டில் வளர்க்கப்படும் பல தானியங்களை மாத்திரமே பயன்படுத்தி வருகிறது.
சுற்றுப்போட்டி தொடர்பில் கருத்துத் தெரிவித்த CBL இன் உணவுக் கொத்தணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலங்க டி சொய்சா குறிப்பிடுகையில், 'இளம் விளையாட்டு வீரர்களின் நாளாந்த வாழ்க்கையில் ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான காரணியாகும். இதனை அடையாளம் கண்டு, இந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்களின் பயணத்தை பலப்படுத்தவும் ஊக்குவிக்கவும் CBL Nutriline ஊட்டச்சத்துப் பங்காளராக இணைந்துள்ளது' என்றார்.
இந்த சுற்றுப்போட்டி கனிஷ்ட பிரிவு (12வயதுக்கு கீழ் மற்றும் மேல்) திறந்த மற்றும் சிரேஷ்ட பிரிவு என மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் சவினி ஜயசூரிய வெற்றிபெற்றதுடன், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லூகா நீசி வெற்றிபெற்றார்.
சரியான ஊட்டச்சத்து, முறையான உணவுப் பழக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் உரிய ஊட்டச்சத்துத் தெரிவுடன் வீரர்கள் விளையாட்டில் ஈடுபடுவது ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் அதிகாரிகள் மற்றும் பங்குபற்றுனர்களுடன் CBL Nutriline இணைந்து செயற்பட்டது.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago