Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 17 , மு.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
Uswatte Confectionery Works, தனது கோல்டன் பிஸ்கட் தெரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை நுகர்வோருக்கு அதிசிறந்த தரம் கொண்ட பிஸ்கட்டுக்களைத் தயாரித்து, வழங்க வேண்டுமென நிறுவனத்தின் ஸ்தாபகரான மறைந்த பீ.ஜே.சீ. பெரேரா (கிறிஸ்டி) அவர்களின் நீண்ட காலக் கனவு நனவாகும் வகையில், பல ஆண்டுகளாக முன்னெடுத்த தெளிவான திட்டமிடல் மற்றும் ஆயத்த வேலைகளைத் தொடர்ந்து, தற்போதைய பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான எஸ். குயின்டஸ் பெரேராவின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் பிஸ்கட் சந்தையிலும் நிறுவனம் தற்போது காலடியெடுத்து வைத்துள்ளது.
Uswatte Golden Biscuits உற்பத்தி வரிசையில் மூன்று கடின வகை (Hard Dough) பிஸ்கட்டுகளும், மூன்று மென் வகை (Soft Dough) பிஸ்கட்டுகளும் அடங்கியுள்ளன. கடின வகை பிஸ்கட்டுகளாக Cream Cracker, Marie மற்றும் Lemon Puff ஆகியன காணப்படுவதுடன், Chocolate Cream, Nice மற்றும் Shorties ஆகியன மென் வகை பிஸ்கட்டுகளாக உள்ளன.
இந்த பிஸ்கட்டுகள் அனைத்தும் சர்வதேச தரத்துக்கு ஈடாக, சுகாதாரத்தைத் தூய்மையாகப் பேணி, உற்பத்தி செய்யப்படுவதுடன், ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து போன்ற நாடுகளிலுள்ள உலகின் மிகச் சிறந்த சுவையூட்டி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மிகச் சிறந்த மூலப்பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் உபயோகிக்கப்படுகின்றன.
உயர் தரத்திலான பிஸ்கட்டுகளை வழங்குவதற்காக பிஸ்கட் உற்பத்தி தொடர்பில் கிடைக்கப்பெறுகின்ற மிகச் சிறந்த இயந்திரத்தொகுதிகளை நிறுவனம் இறக்குமதி செய்துள்ளதுடன், உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணத்துவத்தையும் உபயோகிக்கின்றது.
இந்த அறிமுக நிகழ்வில் குயின்டஸ் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் உஸ்வத்த பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எனது தந்தையாரின் நீண்ட காலக் கனவுகளில் ஒன்றாகக் காணப்பட்டது.
ஆரம்பத்திலிருந்தே நுகர்வோருக்கு உயர் தரம் கொண்ட, சுகாதார ரீதியான உற்பத்திகளை நியாயமான விலைகளில் வழங்குவதற்கு முதலிடம் அளித்து வந்துள்ளோம். அவரது கனவு நனவாகியுள்ள இன்றைய நாள், உஸ்வத்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மிக விசேடமான ஒரு தருணமாகும். Uswatte Golden Biscuits இன் அறிமுகம் புதிய அத்தியாயம் ஒன்றின் ஆரம்பம். எமது நுகர்வோரை மகிழ்விக்கும் வகையில் புதுமையான, வியப்பூட்டும் உற்பத்திகளை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago