
இலங்கையில் ExxonMobil தயாரிப்புகளை விநியோகிக்கும் மொபில் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் இலங்கையில் 'Mobil 1The Grid' நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கான உரிமையை கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் (CSN) நாளிகைக்கு வழங்கியுள்ளது.
ExxonMobil என்பது உலகில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு கம்பனியாகும். இலங்கையின் முன்னணி விளையாட்டு, வாழ்க்கைப்பாணி மற்றும் வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி நாளிகையாக CSN திகழ்கிறது. இலங்கையின் அனைத்து பாகங்களிலும் தெளிவாக தெரியக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு உயர்தரமான விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.
மோட்டார் பந்தய போட்டிகளின் தொகுப்பு நிகழ்ச்சியாக அமைந்துள்ள 'Mobil 1 The Grid' தற்போது சற்றலைட் தொலைக்காட்சி சேவை வழங்குநர்களின் மூலமும் கேபிள் அலைவரிசையிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி CSN நாளிகையிலும், திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது. நான்கு சக்கர பந்தய கார்களின் அதிவேக சாகச போட்டிகள் இந்த நிகழ்ச்சியினூடாக காண்பிக்கப்படுகிறது.
ஃபோர்மியுலா 1 சம்பியன்சிப் போட்டிகளிலிருந்து, அமெரிக்காவின் நாஸ்கார், இன்டிகார் மற்றும் லெமன்ஸ் போன்ற சகல விதமான போட்டிகளின் சாராம்சங்களையும் Mobil 1 The Grid தவறாமல் வழங்கி வருகிறது. வாகன பந்தய ரசிகர்களின் மனங்கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த Mobil 1 The Grid அமைந்துள்ளது.
வெறுமனே பந்தயங்களை மட்டும் ஒளிபரப்பாமல், மிகவும் வேகமாக இயங்கும் ஆற்றல் படைத்த கார்களின் தொழில்நுட்ப வடிவமைப்பு, அவற்றின் செயற்திறனின் இரகசியம் மற்றும் திரைக்கு பின்னால் இடம்பெறும் சம்பவங்கள் போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்டதாக Mobil 1 The Grid நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கார் பந்தய வீரரின் அனுபவப்பகிர்வுகள் குறித்து ஆராயப்படுகின்றன.
மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் மோட்டார் விளையாட்டு குறுகிய காலப்பகுதியினுள் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் CSN உடன் இணைந்து விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.