2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

Premset switchgear வகைகளை இலங்கையில் அறிமுகம் செய்யும் சினெய்டர் எலெக்ட்ரிக்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 13 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலு முகாமைத்துவ துறையில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனமான சினெய்டர் இலெக்ட்ரிக், Premset switchgear வகையை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இலகுவாக பொருத்திக் கொள்ளக்கூடிய வகையில், மெருகேற்றம் செய்து கொள்ளக்கூடிய வகையில், பராமரிப்பதற்கு இலகுவான முறையில் இந்த கட்டமைப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அறிமுக நிகழ்வு பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில், இலங்கை மின்சார சபை மற்றும் Leco ஆகியவற்றிலிருந்து 130க்கும் அதிகமான சிரேஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் இலத்திரனியல் ஆலோசகர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த கட்டமைப்பின் நேரடி செயற்பாட்டை பார்வையிடுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இதன் போது வழங்கப்பட்டிருந்தது.
 
மத்தியளவு வோல்டேஜ் சுவிட்ச் கியர் தொழில்நுட்பத்தின் புரட்சிகரமான தயாரிப்பாக அமைந்துள்ள இந்த Premset switchgear ஆனது Shielded Solid Insulation System (2SIS) இனை பயன்படுத்துகிறது. இந்த நவீன தொழில்நுட்பம் சுவிட்ச் கியரின் செறிவான அங்கங்களை பாதுகாத்து, பாதுகாப்பை உறுதி செய்கிறது. செயற்படுத்துநருக்கும், சாதனத்துக்கும் சிக்கல் இல்லாத சேவை வழங்கப்படுகிறது. 3-இன்-1 வடிவமைப்பின் காரணமாக Premset switchgear என்பது பாதுகாப்பானதும், உள்ளாற்றல் படைத்ததுமாக இது அமைந்துள்ளது. சுற்றை முறித்தல், இடைநிறுத்தல், புவிக்குத் தொடுத்தல் போன்ற சகல செயற்பாடுகளும் ஒன்றிணைக்கப்பட்ட மூன்று முனை சாதனத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது.  இதன் காரணமாக இந்த சாதனத்தை பயன்படுத்துவதும் இலகுவானது. SF6-free வடிவமைப்பானது vacuum மற்றும் air தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், உட்கமைப்புடனான failsafe interlocks உடன் அமைந்துள்ளன.
 
இந்த Premset அறிமுகம் தொடர்பாக சினெய்டர் இலெக்ட்ரிக் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைகான முகாமையாளர் பிரதீப் சைகியா கருத்து தெரிவிக்கையில், 'நாம் இலங்கையில் Premset switchgear வகையை அறிமுகம் செய்வது தொடர்பாக அதிகளவு மகிழ்ச்சியடைகிறோம். மத்தியளவு வோல்ட் விநியோகத்துக்கு வழிகோலுவதுடன், நிகரற்ற பாதுகாப்பு, சிக்கனம் மற்றும் இலகுவான பாவனைக்கு வழியமைப்பதாகவும் அமைந்துள்ளது. switchgear என்பது சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் வகையான தயாரிப்பாகும். உள்ளக மின்கசிவை தடுக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், பாதுகாப்பை மேம்படுத்தி, எந்த சூழலிலும் இயங்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. உபகரணத்தின் ஆயுளை மேலும் 30 வீதத்தால் நீடிக்கும் திறனையும் கொண்டுள்ளது. இலங்கையின் அதிகரித்துச் செல்லும் வலுவுக்கான கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் சினெய்டர் இலெக்ரிக் இலங்கையில் முன்னெடுக்கும் அர்ப்பணிப்பான சேவைகளில் ஓரங்கமாக அமைந்துள்ளது' என்றார்.
 
1920ஆம் ஆண்டு முதல், சினெய்டர் இலெக்ட்ரிக் switchgear கண்டுபிடிப்பு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக இன்றைய தினம் வரையில், MV switchgear தொழில்நுட்பம் சார்பாக முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் இதை தழுவியதாக அமைந்துள்ளது. Premset switchgear என்பது ஆழமான அறிவு மற்றும் அனுபவத்தின் மூலமான வெளிப்பாடாக அமைந்துள்ளது. switchgear தொழில்நுட்பத்தில் முன்னேற்றகரமான மாற்றம் என்பது 20 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறுவதாகும். சினெய்டர் இலெக்ட்ரிக் என்பது வலு முகாமைத்துவத்தில் உலகளாவிய ரீதியில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. பலவேறு சந்தைப்பிரிவுகளுக்கு உகந்த ஒன்றிணைந்த தீர்வுகளை சினெய்டர் எலக்ரிக் வழங்கி வருகிறது. பொருட்கள் மற்றும் உட்கட்டமைப்பு, தொழிற்துறை மற்றும் இயந்திரங்கள் உற்பத்தி, வதிவிடமில்லாத கட்டிடம், டேடா நிலையங்கள் மற்றும் வலையமைப்புகள் மற்றும் குடிமனைகள் போன்றன இதில் உள்ளடங்குகின்றன. வலுவை பாதுகாப்பானதாகவும், உறுதியானதாகவும், சிக்கனமானதாகவும், உற்பத்தித்திறன் வாய்ந்ததாகவும், சூழலுக்கு பாதுகாப்பானதாகவும் உற்பத்தி செய்வதில் அதிகளவு கவனத்தை சினெய்டர் கவனம் செலுத்துகிறது.  குழுமத்தைச் சேர்ந்த 150,000க்கும் அதிகமான ஊழியர்கள் 24 பில்லியன் யூரோ விற்பனை வருமானத்தை 2012ஆம் ஆண்டில் எய்தியிருந்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .