2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

S Cologne புதிர் போட்டியில் வெற்றியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள்

A.P.Mathan   / 2013 மார்ச் 23 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


உள்ளூர் வாசனைத்திரவிய உற்பத்தியில் புதிய புரட்சியை ஏற்படுத்திய S Cologne தற்போது இலங்கை மகளிர் மத்தியில் பிரபலமடைந்துள்ளதுடன் துரிதமாக விற்பனையாகின்றது. நிகழ்கால மகளிரின் தேவைகளை அறிந்து S Cologne மூன்று வகைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்துக்காக Morning Glory பகல் நேரத்துக்காக Day Delight இரவு நேரத்துக்கு Night Fever உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் முதற்தர மூலிகை உற்பத்தி வர்த்தக நாமமான Nature’s Secrets உற்பத்தி செய்து விநியோகிக்கும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெருமையுடன் S Cologne உற்பத்தி செய்கின்றமை விசேட அம்சமாகும். ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட GMP மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO 9001 மற்றும் ISO 14001 ஆகிய தரச்சான்றிதழின் கீழ் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் உற்பத்திகளை மேற்கொள்கின்றது.

S Cologne தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான கேள்விகளுக்கு சரியான பதிலளித்தவர்களுக்கு S Cologne வாசனைத்திரவியங்கள் அடங்கிய பரிசில்கள் கொழும்பு கோட்டையிலுள்ள பழைய ஒல்லாந்த மருத்துவ கட்டடத்தில் அமைந்துள்ள Nature’s Secrets விற்பனை நிலையத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .