Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒடெல், தனது அலெக்ஸாண்டிரா பிளேஸில் உள்ள காட்சியகத்தை, மேலும் 10,000 சதுர அடிகளால் விஸ்தரித்துள்ளது. சர்வதேச வடிவமைப்பு, நிர்மாணத்துறை நிறுவனமான புளோச்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தால், இந்தப் புதிய விஸ்தீரணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, ேஜர்மனியைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு கட்டடக்கலை நிறுவனமாகும். தற்போது ஒடெல்லுக்கு அண்மையிலுள்ள காணியில், வெகு விரைவில் செயற்பாட்டுக்கு வரவுள்ள 645,000 சதுர அடி பரப்பில், புதிய நவீன ஒடெல் காட்சியகத்தையும் இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஏற்கனவே உள்ள பல்வேறு வகையான சர்வதேச வர்த்தக முத்திரைகளோடு, அல்மோ அன்ட் டெஸிகுவலும் இணையவுள்ளது. ஒடெல்லின் முழு அளவான விளையாட்டு ஆடை பிரிவு நைக், றீபொக், அடிடாஸ், கென்டபரி, முத்திரைகளோடு, பெண்களின் உள்ளாடைகள், நீச்சல் உடைகள், ஆண்களுக்கான ஆடைகள், விரிவான தெரிவுகளுடன் கூடிய சப்பாத்துக்கள், ைபகள், வித்தியாசமான சர்வதேச முத்திரைகளுடன் கூடிய டெனிம்கள் என்பனவற்றோடு, இந்தப் புதிய விரிவாக்கமும் இணைந்ததாக, ஒடெல் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு புதிய பொருள் கொள்வனவு அனுபவத்தை வழங்கவுள்ளது. இவை எல்லாம் சேர்த்து, இலங்கையின் மிகவும் சிறப்பான பொருள் கொள்வனவு ஸ்தலத்தை, ஒரு புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லவிருப்பதாகக் கம்பனி அறிவித்துள்ளது.
இந்த விரிவாக்கத்தோடு சேர்த்து ஒடெல், அல்டோவையும் அறிமுகம் செய்கின்றது. இது, கனடாவிலுள்ள மிகவும் கீர்த்திமிக்க உலகளாவிய புகழ் கொண்ட காலணியாகும். அதேபோல், ஆண்களுக்கும் பெண்களுக்குமான உயர்தரப் பாதணிகளையும் ஏனைய உபரிகளையும், இது உள்ளடக்கியுள்ளது. இவை உலகின் புகழ்மிக்க பொப் இசைக் கலைஞர்களாலும் ஏனைய பஷன் பிரபலங்களாலும், விரும்பி அணியப்படுபவை. தனது சர்வதேச பாணியிலான பொருட்கள் மூலம், உள்ளூர் சந்தையில், ஆண்களுக்கான பாதணிகள் பிரிவில் நிலவும் முத்திரைப் பதித்த உற்பத்திகளின் பற்றாக்குறையை, இது போக்கவுள்ளது. ஒடெல்லின் புதிய சில்லறை விற்பனை பிரிவில், இனி ஆண்களும் பெண்களும் பிரத்தியேகமான தரமானப் பாதணி உற்பத்திகளைக் கொள்வனவு செய்து மகிழலாம்.
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
2 hours ago