Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஞ்சி, ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் விருதை வென்றுள்ளது. கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் 2019 விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது இந்த விருதை மஞ்சி பெற்றுக் கொண்டது.
ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் விருது அடங்கலாக, மொத்தம் ஆறு விருதுகளை மஞ்சி தனதாக்கியிருந்தது. ஆண்டின் சிறந்த வர்த்தக நாமத்துக்கான விருதை மஞ்சி வெற்றியீட்டிய ஏழாவது தடவையாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், ஆண்டின் சிறந்த சமூக பொறுப்பு வர்த்தக நாமம், ஆண்டின் சிறந்த தயாரிப்பு வர்த்தக நாமம் மற்றும் ஆண்டின் சிறந்த உள்நாட்டு வர்த்தக நாமம் ஆகிய தங்க விருதுகளையும் மஞ்சி தனதாக்கியிருந்தது.
ஆண்டின் சிறந்த ஏற்றுமதி வர்த்தக நாமம் மற்றும் ஆண்டின் சிறந்த புத்தாக்க வர்த்தக நாமம் ஆகிய வெள்ளி விருதுகளையும் மஞ்சி சுவீகரித்திருந்தது.
ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமம் தங்க விருதை மஞ்சி ஏழாவது தடவையாக இம்முறை சுவீகரித்திருந்தமை விசேட அம்சமாகும். சமூகத்துக்கு நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பான நடவடிக்கைகள் இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக, நாட்டில் காணப்படும் அதிக தேவைகளைக் கொண்ட சமூகங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
21 minute ago
56 minute ago