Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னணி எல்லை கடந்த அதிவேக சேவைகள் வழங்குநரான DHL Express நிறுவனம் அதன் வளர்ச்சியில்; 10 சதவீதமாக இருந்தபோதிலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதன் கரியமில செயற்திறனை ஆண்டுதோறும் விருத்தி செய்து வருகிறது. கடந்த 2014 ஆண்டின் கரியமில செயற்திறன் விருத்தியானது மலேசியாவில் 21 சதவீதம், இந்தியாவில் 15 சதவீதம் மற்றும் தாய்வானில் 14 சதவீத வளர்ச்சி போன்ற மிகச்சிறந்த செயற்திறன் வளர்ச்சியுடன் ஆசிய பசுபிக் முழுவதும் 12 வீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
DHL நிறுவனத்தின் தாய் நிறுவனமான Deutsche Post DHL குழுமமானது 2007இன் அடிப்படைக்கோட்டுக்கு எதிராக அதன் கரியமில செயற்திறனில் 23 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. கரியமில செயற்திறன் பிரிவின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை இது குறிப்பதுடன், 2007ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டளவில் அதன் செயற்;பாடுகளில்(மற்றும் அதன் போக்குவரத்து துணை ஒப்பந்தக்காரர்கள்) கரியமில செயற்திறனை 30 சதவீதத்தால் விருத்தி செய்துகொள்வதற்கான குழுமத்தின் குறிக்கோளை அடைவதற்கான மற்றுமொரு மிகப்பெரிய படிமுறையாக அமைந்துள்ளது. DHL நிறுவனம் சூழல் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் அதன் GoGreen திட்டத்தின் ஓர் அங்கமாக விருத்தி செய்யப்பட்ட GOGREEN சேவைகளுடன், கடந்த 2014 இல் காலநிலை பாதுகாப்பு திட்டங்களுக்கான பங்களிப்பு ஊடாக 248,570 டொன் கரியமில வாயுவுடன் 2.12 பில்லியன் நடுநிலையான காலநிலை கப்பல் ஏற்றுமதிகளை அனுப்பி வைத்துள்ளது.
DHL Express ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஜெரி ஹுஸு கருத்து தெரிவிக்கையில், '2007 உடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டளவில் 30 சதவீத கரியமில வாயு செயற்திறன் வளர்ச்சியை அடையும் கூட்டாண்மை மூலோபாயத்துடன் இந்த GoGreen திட்டம் எமது வர்த்தகத்துடன் ஆழமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. புதுமையான தீர்வுகளின் அறிமுகம் மற்றும் அபிவிருத்தி ஊடாக ஆறு வருடங்களாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தொடர்ந்து கரியமில செயற்திறன் வளர்ச்சியடைந்து வருவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பிராந்தியத்தில் எமது 'பசுமை' கப்பற்படையை வரிசைப்படுத்தல், எமது வசதியில் மிகவும் ஆற்றல் மிக்க ஒளி அமைப்புக்களை நிறுவுதல் மற்றும் எமது தரைவழி கரியமில செயல்பாடுகளின் செயற்திறனை மேலும் மேம்படுத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டினை அதிகரித்தல் போன்ற எமது முயற்சிகளின் விளைவாகவே கடந்த 2014 இல் CO2 செயற்திறன் 12 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. 'சரக்கியல் துறையின் உலகளாவிய தலைவர் எனும் ரீதியில் நாம் இந்த இலக்கினை எய்துவதற்கான எமது முயற்சிகளில் திறம்பட பயணித்து வருகிறோம். GoGreen திட்டத்திற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். சூழல் மீதான எமது பொறுப்பினை நிலைநிறுத்தி பூமிக்கும், எமது வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை தொடர்ந்து உண்டாக்கவுள்ளோம்' என்றார்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் சிறந்த எரிபொருள் செயற்திறனுடன் கூடிய புதிய வாகனங்களுக்கான நவீனமயப்படுத்தப்பட்ட போக்குவரத்து தொகுதியானது குறிப்பாக சீனா, ஹொங்கொங், ஜப்பான், மலேசியா மற்றும் தாய்வான் போன்ற முக்கிய நாடுகளில் தொடர்ந்து CO2 செயற்திறன் வெற்றியை ஈட்டியுள்ளது. DHL Express நிறுவனம் அதன் சூழல் திட்டத்தின் ஓர் அங்கமாக ஜப்பான் டோக்கியோவின் Marunouchi மாவட்டத்தில் பெறல் மற்றும் விநியோக சேவைகளுக்காக இலத்திரனியல் வர்த்தக வாகனங்களுக்கான 'பசுமை' கப்பற்படையை அறிமுகம் செய்திருந்தது. மேலும் சீனா, மலேசியா, ஹொங்கொங் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தூய்மையான தொழில்நுட்பம், மாற்று எரிபொருள் மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு/ திரவ பெட்ரோலிய வாயு, ஹைபிரிட் மற்றும் இலத்திரனியல் வகைகள் போன்ற அதிக ஆற்றல் செயற்திறன் அலகுகளினால் இயக்கப்படும் ட்ரக்குகள், வேன்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் கப்பற்படையினை விருத்தி மற்றும் மேம்படுத்தியிருந்தது.
CO2 இனை வெளிப்படுத்தும் வழக்கமான மின்தொகுப்பு வலு (grid power) மூலம் மின்னேற்றப்படும் மின்சார ஸ்கூட்டர்களை போல் அல்லாது, சரக்கியல் துறையில் புதிய கண்டுபிடிப்பாக சூரியசக்தி மின்னேற்ற நிலையத்தின் ஊடாக மின்னேற்றக்கூடிய 'Zero-emission' போக்குவரத்து அமைப்பினை இலத்திரனியல் ஸ்கூட்டர்களில் DHL Express தாய்வான் சோதனை செய்து பார்த்தமையானது 2014 இனை முன்னுதாரணமான ஓர் ஆண்டாக்கியது. இந்த நிலையத்திற்கு உள்நாட்டு பயன்பாடுகள் எதுவும் தேவையில்லை. முற்றுமுழுதான ஆற்றல் தேவைகளையும் அதன் சொந்த சூரியதகடுகள் வரிசையிலிருந்து பெற்றுக்கொள்கிறது.
மேலும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியா (13 சதவீதம்), தாய்லாந்து (13 சதவீதம்) மற்றும் பிரதான நிலப்பரப்பான சீனா (13 சதவீதம்) போன்ற நாடுகள் CO2 செயற்திறன் விருத்தியை எய்திய ஏனைய செயற்பாட்டாளர்களாக விளங்குகின்றன.
DHL Express ஆசிய பசுபிக் நிறுவனமானது ஒழிப்பு திட்டங்கள் ஊடாக அளவிடல் மற்றும் மேம்படுத்தல்களை மேற்கொள்ளும் வகையில் மனை விற்பனை மற்றும் தரைவழி போக்குவரத்து துறையின் ஆற்றல் பயன்பாட்டில் அதன் கரியமில தடங்கள் குறித்த மதிப்பீடுகளை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டம் முதல்தடவையாக கடந்த 2008இல் DHL Express மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், தற்போது ஆசிய பசுபிக் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட சந்தைகளில் 1000 இற்கும் மேற்பட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago