2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

இரட்டை விருதுகளை வென்ற HNB Finance

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, 2025 ஆம் ஆண்டு CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில்  இரட்டை விருதுகளைப் பெற்று, அதன் வெளிப்படைத்தன்மை, நிறுவன மரபுகளைப் பேணல் மற்றும் விரிவான வணிக செயல்திறனுக்கான அதன் நிறுவன அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

இம்முறை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், HNB FINANCE PLC நிறுவனம் நிதி மற்றும் குத்தகைத் துறையில் சிறந்த விரிவான நிறுவன அறிக்கையளிப்பிற்கான மூன்றாம் இடத்தைப் பெற்றது; மேலும், அதன் நிறுவன அறிக்கையின் தரம் மற்றும் பங்குதாரர்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு விருது சான்றிதழையும் வென்றது.

 

CMA சிறந்த விரிவான வருடாந்திர அறிக்கை விருது வழங்கும் நிகழ்வுஎன்பது இலங்கைசான்றளிக்கப்பட்ட நிர்வாக கணக்காளர்கள் நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். இது நாட்டின் வணிகத் துறையின் நிதி அறிக்கையிடலானது உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைந்து தொடர்புடைய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவதை மதிப்பீடு

செய்வதற்கான முக்கிய கருவியாகும். விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கைகள் பல முக்கிய அளவுகோல்களின் அடிப்படையயில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அந்த அளவுகோல்களாவன: நிதி செயல்திறன் மற்றும் மூலோபாய நிர்வகிப்பு, நிறுவன நிர்வாகம் மற்றும்

தரநிலைகளுக்கு இணக்கம், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மாற்றம், நிலையான நடைமுறைகள் மற்றும் தொழில்முறை சிறப்பு ஆகியவை ஆகும்.

 

CMA சிறந்த விரிவான வருடாந்திர அறிக்கை விருது வழங்கும் நிகழ்வுதொடர்பாக கருத்து தெரிவித்த HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறுகையில், மேம்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரநிலைகளுடன் இணக்கமான நிறுவன

அறிக்கையிடலை பராமரிப்பதன் மூலம் அதிக வெளிப்படைத்தன்மை கொண்ட நிதி அறிக்கையிடலை மேற்கொள்வதில் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இந்த விருதுகளால் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றன என்று நான் கருதுகிறேன். HNB FINANCE, எங்கள் நிறுவனம் ஒரு முன்னோக்கு

பார்வையுடன் கூடிய நிதி நிர்வகிப்பு கொண்ட, புத்தாக்கத்துக்கு முன்னுரிமை அளிக்கும் நீண்டகால நிலையான மதிப்பை உருவாக்குவதற்கு வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு உகந்த நிறுவன ஆளுமைக் கட்டமைப்பை எப்போதும் பராமரித்து வருகிறோம். ஒரு குழுவாக, நாங்கள் உயர்த்தியுள்ள இந்த

மதிப்புகளுக்கான எங்கள் பாதை சரியானது என்பது இந்த CMA சிறந்த விரிவான வருடாந்திர அறிக்கை விருது வழங்கும் நிகழ்வுமூலம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறதுஎன்று அவர் கூறினார்.

 

CMA சிறப்பு விரிவான வருடாந்திர அறிக்கை விருது வழங்கும் நிகழ்வுஎன்பது CMA இலங்கை அமைப்பால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். இது நாட்டின் வணிக நிறுவனங்களின் பெருநிறுவன வருடாந்திர அறிக்கையிடலை சர்வதேச தரங்களுக்கு உயர்த்துவதன் மூலம், அந்த

நிறுவனங்களிடையே பெருநிறுவன ஆளுமை வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சிறந்த பெருநிறுவன வெளிப்படுத்துதலுக்கான தேவையான ஊக்கத்தை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .